For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகா மட்டும்தான் இந்தியாவா? இல்ல.. மாண்டியா மட்டும்தான் கர்நாடகாவா?: சி.பி.எம். கடும் தாக்கு

By Mathi
Google Oneindia Tamil News

CPM
கோலார்: காவிரி நதிநீரை தமிழகத்துக்குத் திறந்துவிடக் கூடாது என்று கன்னட அமைப்புகளுடன் இணைந்து கொண்டு கர்நாடக தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பும் குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழகத்துக்கு எதிரான போராட்டங்களை கடுமையாக விமர்சித்திருக்கிறார் கர்நாடக மார்க்சிஸ்ட் கட்சி செயலர் ஸ்ரீராம ரெட்டி.

கோலாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீராம ரெட்டி பேசியதாவது:

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு நீரை திறந்துவிடக் கூடாது என்று கர்நாடக தலைவர்கள் பேசிவருவது நாட்டின் உயரிய அரசியல் அமைப்புக்கு விடுக்கப்படுகிற பெரிய அச்சுறுத்தல். மக்களின் உணர்வுகளை அரசியல் தலைவர்கள் தூண்டி விடுகின்றனர். காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகின்றன கட்சிகள்.

கர்நாடகத்தின் கோலார் மற்றும் சிக்பல்லபூரை ஒப்பிடுகையில் மாண்டியா மாவட்டத்தில் வேளாண்சாகுபடி சிறபாகவே இருக்கிறது. கோலார் மற்றும் சிக்பல்லபூர் மாவட்டங்களில் குடிக்கக் கூட நீர் இல்லை. காவிரி பிரச்சனையில் அனைத்து கட்சிகளும் களத்தில் குதிக்கின்றன. ஆனால் ஹைதராபாத் கர்நாடகா பகுதியின் குடிநீர் பிரச்சனையையோ அல்லது மத்திய கர்நாடகாவின் குடிநீர் பிரச்சனையையோ பற்றி யாரும் பேசுவதே இல்லை.

தமிழகத்தில் உள்ள விவசாயிகளும் இந்தியர்கள்தானே... கர்நாடகா மட்டுமே இந்தியா அல்ல.. மாண்டியா மட்டுமே கர்நாடகாவும் இல்லை... கர்நாடகாவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. மாண்டியா மாவட்டத்தில் 45 விழுக்காடு விவசாயிகள்தான் காவிரி நீரை நம்பியிருக்கின்றனர்.

கோலார் மற்ற்ம் சிக்பல்லபூரில் மொத்தம் 4100 ஏரிகள் இருக்கின்றன. இவை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை. இன்று பெரும்பாலானவை வறண்டு போய் கிடக்கிறது. கனமழை பெய்தாலும் கூட ஏரிகள் நிரம்புவதில்லை என்றார் அவர்.

English summary
The CPI(M) leader says there is lack of political will to solve State’s irrigation woes, terms sections of Cauvery agitators politically motivated. Calling for a nuanced approach to the ongoing Cauvery water-sharing dispute, Communist Party of India (Marxist) State secretary G.V. Srirama Reddy has accused vested interests of hijacking the issue for petty political gain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X