For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐரோப்பிய யூனியனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

By Chakra
Google Oneindia Tamil News

European Union
ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய யூனியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1957ம் ஆண்டில் 6 ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது தான் ஐரோப்பிய யூனியன். இப்போது இதில் 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதற்காக ஒரு பொது பாராளுமன்றமும் பின்னர் பொதுவான கரன்சியாக யூரோவும் அறிமுகப்படுத்தப்பட்டன. 17 நாடுகள் இந்த யூரோவை கரன்சியாக பயன்படுத்தி வருகின்றன.

இந்த யூனியன் உருவாகி 55 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இப்போது தான் அது மாபெரும் சோதனைகளை சந்தித்து வருகிறது. இந்த யூனியனில் உள்ள ஸ்பெயின், கிரீஸ், போர்சுகல் போன்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதோடு, பொது கரன்சியான யூரோவின் மதிப்பையும் சரித்து வருகின்றன.

இதனால் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பொருளாதாரமும் தள்ளாடிக் கொண்டுள்ளது. இதையடுத்து கிரீஸை யூனியனை விட்டே விரட்ட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

இந் நிலையில் இந்த யூனியனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஐரோப்பாவில் அமைதி, ஒற்றுமை, ஜனநாயகம், மனித உரிமைகளை தழைத்தோங்கச் செய்ததில் ஐரோப்பிய யூனியனின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்து. பிரிந்து கிடந்த கிழக்கு, மேற்கு ஜெர்மனிகளை ஒருங்கிணைத்ததில் ஐரோப்பிய யூனியனுக்கு பெரும் பங்கு உண்டு என்று நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ள ஐரோப்பிய யூனியனில் நிலவும் 'பொருளாதார போரில்' இனியாவது அமைதி ஏற்பட்டால் சரி.!

English summary
The European Union has been awarded the Nobel Peace Prize in the midst of its greatest crisis since its beginnings in the 1950s. EU received the award for six decades of contributions “to the advancement of peace and reconciliation, democracy and human rights in Europe.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X