'பிரா'வில் ஒளித்து வைத்திருந்த கத்தியால் குத்தி பெண் கொலை!
லண்டன்: இங்கிலாந்தில், தன்னைப் பார்த்து கிண்டலாக சிரித்த பெண்ணை தனது பிராவில் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் குத்திக் கொலை செய்தார் ஒரு பெண். அப்பெண்ணைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு 18 மாத சிறைத் தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது.
கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஆல்வன் ஜோன்ஸ். 24 வயதாகிறது. இவரால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் எம்மா ஜோன்ஸ், 31 வயது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சம்பவ தினத்தன்று இரவு ஒரு பார்ட்டி நடந்தது. அதில் எம்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென ஒரு வாதம் மூண்டது. அப்போது ஆல்வனைப் பார்த்து எம்மா கேலியாக சிரித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்தார் ஆல்வன். இதையடுத்து அவர்களை மற்றவர்கள் சமாதானப்படுத்தினர்.
பின்னர் எம்மா அருகில் இருந்த தனது வீட்டுக்குப் புறப்பட்டுப் போய் விட்டார். ஆனால் ஆத்திரம் தணியாத ஆல்வன் தனது வீட்டு கிச்சனுக்குப் போனார். அங்கு கத்தி ஒன்றை எடுத்து தனது பிராவுக்குள் மறைத்துக் கொண்டார். பின்னர் எம்மா வீட்டுக்குப் போனார்.
வெளியே நின்று கொண்டு தைரியம் இருந்தால் இப்போது வெளியே வா எம்மா என்று சத்தம் போட்டார். சத்தம் கேட்டு எம்மா வெளியே வந்தார். அப்போது கோபத்துடன் நின்றிருந்த ஆல்வனைப் பார்த்து மறுபடியும் அவர் கேலியாக சிரித்தார். இதைப் பார்த்து மேலும் கோபமடைந்த ஆல்வன், பிராவுக்குள் ஒளித்து வைத்திருந்த கத்தியை எடுத்து எம்மாவை சரமாரியாக நெஞ்சில் குத்தினார். இதில் படுகாயமடைந்த எம்மா ரத்த வெள்ளத்தில் வீழ்ந்தார்.
அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு எம்மா உயிரிழந்தார். இதையடுத்து ஆல்வன் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் தனது குற்றத்தை ஆல்வன் ஒப்புக் கொண்டார். இதையடுத்து 18 மாதசிறைத் தண்டனை விதிக்கப்படவுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications