For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி சுவாமி முறையீடு

By Mathi
Google Oneindia Tamil News

Subramanian swamy
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் பொது நிறுவன சொத்துகளை அபகரிக்க கடன் கொடுத்த காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறார் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

சோனியா-ராகுல் மீதான புகார் என்ன?

சோனியாவும் ராகுல் காந்தியும் 76% பங்குகளை வைத்திருக்கும் யங் இந்தியா என்ற தனியார் நிறுவனம் பொது நிறுவனமான அசோசியேட் ஜேர்னல் லிமிடெட்டின் ரூ1600 கோடி சொத்துகளை அபகரித்திருக்கிறது. யங் இந்தியா நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் கொடுத்திருக்கிறது என்பதுதான் சுப்பிரமணிய சுவாமி கூறும் புகார்.

தேர்தல் ஆணையத்திடம் மனு

சுப்பிரமணியன் சுவாமி கூறுவது பொய் என்று காங்கிரஸ் பொதுச்செயலரான ராகுல் காந்தி கூறிவந்த நிலையில் காங்கிரஸின் மற்றொரு பொதுச்செயலரான தினேஷ் திரிவேதி, சோனியா நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் கொடுத்தது உண்மைதான் ஆனால் வியாபார நோக்கத்துக்காக கடன் கொடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

காங்கிரஸின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தாம் இன்று தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் அங்கீகாரத்தை திரும்பப் பெற வலியுறுத்தும் மனுவை இன்று சுப்பிரமணியன் சுவாமி கொடுத்திருக்கிறார்.

English summary
Janata Party chief Subramanian Swamy on Saturday said he will file a petition before the Election Commission seeking de-recognition of the Congress party for 'providing' interest-free loan to The Associated Journals Limited, publisher of National Herald and other newspapers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X