For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிசம்பர் 1 முதல் அடையாள அட்டை இல்லாமல் ரயிலில் பயணம் செய்ய முடியாது!!

Google Oneindia Tamil News

சென்னை: டிசம்பர் 1ம் தேதி முதல் ரயிலின் அனைத்து வகுப்புகளிலும் பயணம் செய்ய அடையாள அட்டை அவசியம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயிலில் பயணம் செய்ய ஏஜெண்டுகள் மூலம் டிக்கெட்டுகள் தவறாக விற்பனை செய்யப்படுவதாக பரவலாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் இந்த முறைகேட்டை தடுக்கும் வகையில் தட்கல் டிக்கெட் மூலம் பயணம் செய்பவர்களும், குளிர்சாதன வகுப்பு பெட்டியில் பயணம் செய்பவர்களும் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 1ம் தேதி முதல் 2ம் வகுப்பு தூங்கும் வசதி, 2ம் வகுப்பு உட்காரும் வசதி, முதல் வகுப்பு, 3 அடுக்கு நடுத்தர வகுப்பு ஆகிய பிரிவினரும் முன்பதிவு செய்யும் போது அடையாள அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும். அந்த அடையாள அட்டையின் ஒரிஜினலை பயணத்தின் போது காட்ட வேண்டும்.

முன்பதிவு செய்திருந்தாலும் இனி அடையாள அட்டை இல்லாமல் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அடையாள அட்டை அனைத்து பிரிவுகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In an attempt to facilitate travel of bonafide passengers and reduce misuse of ticketing system, the railways on Thursday decided to extend the condition of carrying original proof of identity during travel on reserved tickets for all classes in a train.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X