For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்- புளோரிடாவிலும் ஒபாமா வெற்றி! மொத்தம் 332 வாக்குகளைப் பெற்றார்!

By Mathi
Google Oneindia Tamil News

Barack Obama
புளோரிடா: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் புளோரிடா மாநில முடிவுகள் 4 நாட்களுக்குப் பின்னரே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமையே வெளியிடப்பட்டுவிட்டன. வெற்றிக்குத் தேவையான வாக்குகள் எண்ணிக்கை 270. ஆனால் ஒபாமா 303 வாக்குகளைப் பெற்றிருந்ததால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராம்னியோ 206 வாக்குகள்தான் பெற்றிருந்தா. இந்த முடிவுகளின் போது புளோரிடா மாநில முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

புளோரிடா வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வந்தது. நேற்று இரவுதான் அதிகாரபூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இம்மாநிலத்தில் ஒபாமாவுக்கு கிடைத்துள்ள 29 வாக்குகள் மூலம், மொத்தம் 332 வாக்குகளை ஒபாமா பெற்றிருக்கிறார். புளோரிடா மாநிலத்தில் ஒபாமா 50.1% வாக்குகளையும், ராம்னி 49.13% வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஒபாமா 74 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

English summary
President Barack Obama was declared the winner of Florida's 29 electoral votes on Saturday, ending a four-day count with a razor-thin margin that narrowly avoided an automatic recount that would have brought back memories of 2000. No matter the outcome, Obama had already clinched re-election and now has 332 electoral votes to Romney's 206.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X