இந்தியாவில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் பிசினஸ் 'மகாலட்சுமிகள்'!
வர்த்தக உலகில் ஆண்கள் மட்டுமே கொடி கட்டி பறந்த காலம் மலையேறிவிட்டது. பெண்களும் கோடி கோடியாய் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டனர். ஆண்களுக்கு நிகராக ஏன் அவர்களையும் விட அதிகமாகவே சம்பாதிக்கின்றனர். வருடத்திற்கு பலகோடி ரூபாய் சம்பளம் பெறும் இந்தியாவின் பிசினஸ் மகாலட்சுமிகளைப் பற்றி பார்ச்சூன் வர்த்தக இதழ் பட்டியலிட்டுள்ளது

சன் டிவி காவேரி கலாநிதி மாறன்
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகள் பட்டியலில் சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறன் முதலிடத்தில் இருக்கிறார். இவரது ஆண்டு சம்பளம் ரூ. 57 கோடியாகும். கோடியாகும். கடந்த ஆண்டும் இந்த பட்டியலில் இவர் முதலிடத்தில் இருந்தார்.

பெனின்சுலா லேன்ட் ஊர்வி பிரமாள்
பெனின்சுலா லேன்ட் நிறுவனத்தின் தலைவர் ஊர்வி பிரமாள் இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். இவரது ஆண்டு சம்பளம் 7.3 கோடியாகும். ரியல்எஸ்டேட், டெக்ஸ்டைல், பொறியியல்துறை, விளையாட்டு, பொழுதுபோக்குத்துறையில் இவருடைய நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இவர் வனவிலங்கு ஆர்வலர் மட்டுமல்ல இசை கேட்பதும், புத்தகம் படிப்பதும் இவருடைய பொழுது போக்காகும். அவ்வப்போது மனதிற்குப் பிடித்த இடங்களுக்கு பயணம் மேற்கொள்வார்.

அப்பல்லோ மருத்துவமனை பிரீத்தா ரெட்டி
அதிகம் சம்பளம் பெறும் மூன்றாவது மகாலட்சுமி பிரீத்தா ரெட்டி. இவர் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். இவரது ஆண்டு சம்பளம் 6.9 கோடி திட்டமிடுவதும், புதிய திட்டங்களுக்கு ஏற்ப பணத்தை ஒதுக்குவதிலும் சிறப்பாக செயல்படுவாராம்.

ஜே.கே.லட்சுமி சிமெண்ட் வினிதா சிங்ஹானியா
ஜே.கே.லட்சுமி சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நான்காவது இடத்தில் இருக்கிறார் இவர் ஆண்டுக்கு 5.9 கோடி சம்பளம் பெறுகிறார். பிஸினஸ் உலகில் சாதனை புரிந்ததற்காக தங்கமயில் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

பிரிட்டானியா வினிதா பாலி
பிரிட்டானியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினிதா பாலியின் ஆண்டு வருமானம் 5.7 கோடியாகும். இவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். டெல்லியில் உள்ள எல்எஸ்ஆர் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பட்டம் பெற்றுள்ளார். மும்பை ஜம்னாலால் பஜாஜ் நிர்வாகவியல் கல்லூரியில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.

ஹெச்டிஎப்சி ரேனு சுத் கர்நாட்
ஹெச்.டி.எப்.சி எனப்படும் ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷனின் மேலாண்மை இயக்குநராக இருக்கும் ரேனு சுத் கர்நாட் இந்த பட்டியலில் 6 வது இடத்தில் இருக்கிறார். இவரது ஆண்டு வருமானம் 5.1 கோடி ரூபாய். இவருடைய தலைமையின் கீழ் 3,73,000 கோடி ரூபாய் வரை வீட்டு லோன்கள் கொடுக்கப்பட்டுள்ளனவாம்.

அப்பல்லோ சுனிதா ரெட்டி
அப்பல்லோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டியின் ஆண்டு சம்பளம் 5 கோடி ரூபாயாகும். இவர் மருத்துவத்துறையில் முதன் முதலில் அந்நிய முதலீடு கிடைப்பதற்கு வழி செய்தவர் என்கின்றனர்.

ஐ.சி.ஐ.சி.ஐ சந்தா கோச்சர்
உலகின் சக்தி வாய்ந்த பெண்மணிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள சந்தா கோச்சர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ ஆக இருக்கிறார். இவருடைய ஆண்டு சம்பளம் 4.24 கோடி ரூபாயாகும். இவருடைய சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மபூசன் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications