For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆயுதள் தண்டனை கைதிகள் 14 அல்லது 20 ஆண்டுகளில் விடுக்க உச்சநீதிமன்றம் எதிர்ப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Supreme Court
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி தமது ஆயுள் காலம் முழுவதும் சிறையில் தண்டனையை அனுபவிக்க வேண்டும். 14 அல்லது 20 ஆண்டுகளில் விடுதலை செய்யக் குடாது என்று ஆயுள் தண்டனை வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், பி. லோகூர் ஆகியோர் தீர்ப்பளித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் சிறையில் 14 அல்லது 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்டால் அவர் தன்னை விடுதலை செய்ய கோருவதற்கு உரிமை உள்ளது என்று நினைப்பதாக தெரிகிறது. ஆனால், அப்படி உரிமை எதுவும் இல்லை.ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருக்கும் குற்றவாளி ஒருவர், அவருக்கு அரசாங்கம் ஏதாவது தண்டனை குறைப்பு அளித்தால் அன்றி, அவர் தனது ஆயுள் காலம் முழுவதும் சிறை தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் பண்டிகைகள் அல்லது ஏதாவது ஒருநாளில் அரசுகள் கைதிகளின் தண்டனையை குறைத்து விடுதலை செய்வதை அனுமதிக்க முடியாது என்பதுதான் எங்களது கருத்து. அரசுகள், தண்டனை குறைப்பு அளிப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று சொல்லலாம். அதேபோல், தண்டனையை குறைக்கும்படி கேட்க உரிமை இல்லை என்று தடுக்க முடியாது என்று கைதிகளும் சொல்லலாம். ஆயுள் தண்டனை கைதியின் சிறை காலத்தை 14 ஆண்டுகளுக்கும் கீழ் அரசுகள் குறைக்க முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.

English summary
The life imprisonment implies a jail term till the end of convict's life and it is not limited to merely 14 or 20 years, which is a misconception, the Supreme Court has held in a significant ruling
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X