For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நபிகளை இழிவுபடுத்தி படம் எடு்த்தவர், யு.எஸ். பாதிரியார் உள்பட 8 பேருக்கு எகிப்து கோர்ட் மரண தண்டனை

By Siva
Google Oneindia Tamil News

கெய்ரோ: இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி படம் தயாரித்த நகோலா, அதனை இன்டர்நெட்டில் அப்லோட் செய்த எகிப்தியர்கள் 6 பேர் மற்றும் புளோரிடாவைச் சேர்ந்த அமெரிக்க பாதிரியார் ஒருவருக்கு எகிப்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட தி இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து சர்ச்சைக்குரிய படத்தை இயக்கிய எகிப்து அமெரிக்கரான நகோலாவுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. அதன்படி நகோலா தற்போது சிறையில் உள்ளார். இதற்கிடையே அந்த படத்தை இன்டர்நெட்டில் அப்லோட் செய்த 6 எகிப்தியர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இந்நிலையில் இந்த படத்தை எதிர்த்து எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள நீதிமன்றத்தில் நகோலா, புளோரிடாவைச் சேர்ந்த அமெரிக்க பாதிரியார் மற்றும் 6 எகிப்தியர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகமலேயே நடந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய படத்தை இயக்கிய நகோலா, அமெரிக்க பாதிரியார் மற்றும் படத்தை இன்டர்நெட்டில் போட்ட 6 எகிப்தியர்களுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி சய்ப் அல்-நஸ்ர் தீர்ப்பளித்தார்.

English summary
An Egyptian court sentenced 8 persons including a Florida based American pastor to death over the anti-islam movie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X