For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொருளாதார வளர்ச்சிக்காக "கடுமையான நடவடிக்கைகள்" மேற்கொள்ளப்படும்: ப. சிதம்பரம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக சில கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

லோக்சபாவில் துணை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய ப.சிதம்பரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக சில கசப்பு மருந்துகள் எடுக்கப்படும். இந்தக் கசப்பு மருந்து மிகவும் அவசியமானது. வேறு வழியில்லை. நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 5.3% என்ற அளவில் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும், பற்றாக்குறையை இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதியில் 3% ஆகக் குறைக்கவும் திட்டமிட்டிருக்கிறோம்.

மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக கடந்த 9 ஆண்டுகளில் ரூ.69,000 கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறது. நாம் தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக பொருளாதார நிலை சீரடையும் என்றார் அவர்.

English summary
Finance Minister P Chidambaram has warned that some "bitter medicine" is necessary to restore the health of the economy ,uncharacteristically using words that signal some tough measures may be in the offing in the government's quest to revive growth and restore fiscal credibility .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X