For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளம்- ரஷிய தூதரின் கருத்துக்கு அணு உலை எதிர்ப்பாளர்கள் கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

Kudankulam
சென்னை: இந்தியா வல்லரசாவதை விரும்பாதவர்கள்தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கின்றனர் என்று இந்தியாவுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் கடாகின் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் நேற்று 40-வது ஆண்டு ரஷிய கலைவிழாவை தொடங்கி வைத்து கடாகின் பேசுகையில், இந்திய, ரஷிய கலாசாரம் பாரம்பரியமிக்கது. இதனால்தான் ஆண்டுதோறும் ரஷிய கலை விழா நடத்தப்படுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது யூனிட் மின்சார உற்பத்திக்கு தயாராக உள்ளது. அதேபோல இரண்டாவது யூனிட் அணு உலை பணிகள் இன்னும் 6 மாத காலத்தில் முடிவடையும். கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்கள் என்றார் அவர்.

ரஷிய தூதரின் இந்த கருத்துக்கு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி கருத்து தெரிவித்த கூடங்குளம் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், ரஷிய தூதர் தமக்கு கொடுக்கப்பட்ட பணி என்னவோ அதை மட்டும்தான் பார்க்க வேண்டும். இந்த நாட்டின் அரசியலில் தலையிடுவதற்கு அவருக்கு உரிமை இல்லை என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

English summary
Russian ambassador to India Alexander said that the Kudankulam nuclear protestors are anti- india forces.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X