For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்ஜெட் குறித்து நிபுணர்களுடன் ப.சிதம்பரம் இன்று ஆலோசனை

By Siva
Google Oneindia Tamil News

P Chidambaram
டெல்லி: பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன்பு வேளாண் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்களுடன் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 2013-2014ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் அவர் இன்று பட்ஜெட் குறித்து முதலில் வேளாண் பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அவர்கள் அளிக்கும் நல்ல பரிந்துரைகள் பட்ஜெட்டில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் நடப்பு கணக்குப் பற்றாக்குறை 5.4 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் ஏப்ரல்-நவம்பர் காலத்தில் நிதி பற்றாக்குறை ரூ.4.13 கோடியாக இருந்தது.

2012-2013ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. அதிலும் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Finance minister P. Chidambaram will start pre-budget consultations with agriculturalists, sectoral experts, industry captains and economists today to get their feedback and inputs for possible incorporation in Budget 2013-14.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X