For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பலாத்கார எம்.பி., எம்.எல்.ஏக்களை நீக்கும் அதிகாரம் இல்லை: சுப்ரீம் கோர்ட்

By Mathi
Google Oneindia Tamil News

Supreme court
டெல்லி: பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

பாலியல் பலாத்கார வழக்குகள் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தாக்கல் செய்த பொது நலன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. பலாத்கார வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை மத்திய, மாநில அரசுகள் அமைக்கும் நிலையில் நீதிபதிகளை எவ்வாறு தேர்வு செய்வீர்கள் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு எந்த வகையில் நிர்ணயிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் அரசின் திட்டம் குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதேபோல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய முடியாது. எங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை. அதுபோன்ற வாய்ப்பும் இல்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

English summary
The Supreme Court on Friday declined to hear a plea for disqualification of MPs and MLAs chargesheeted for crime against women but agreed to go into issues of fast track trial of rape cases and implementation of laws for safety of women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X