For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவூதியில் இலங்கைப் பெண்ணின் 'தலை துண்டி' மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது!

By Mathi
Google Oneindia Tamil News

ரியாத்: சவூதி அரேபியாவில் 4 மாத குழந்தையின் மரணத்துக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்ற பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ரிஸானா சவூதியில் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் மீது 2005-ம் ஆண்டு 4 மாத குழந்தையின் மரணத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டி வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் 2007-ம் ஆண்டு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் இலங்கை அரசு சார்பில் ரிஸானாவின் வயது 17தான் என்பதால் கருணை காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. சவூதி அரசர் அப்துல்லாவுக்கும் ரிஸானாவின் பெற்றோர் கருணைமனு அனுப்பியிருந்தனர். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் ரிஸானாவுக்கு கருணை காட்ட வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று ரிஸானாவின் தலையை துண்டித்து சவூதி அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

English summary
Saudi Arabia has beheaded a Sri Lankan domestic worker for killing a baby in her care in 2005 in a case that has been widely condemned by rights groups.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X