For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட செயற்கை ரத்தம்... சென்னை ஐஐடி சாதனை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Artificial Blood
சென்னை: உயிர்களை காக்க உதவும் ரத்தத்தினை செயற்கையாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சென்னை ஐ.ஐ.டி விஞ்ஞானிகள். இந்த ரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு அறுவை சிகிச்சையின் போது ரத்தம் தேவைப்படுகிறது. இதற்காக ரத்ததானம் செய்பவர்களையோ, ரத்த வங்கிகளையோ நாடவேண்டியுள்ளது. ஒரு சிலருக்கு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வகை ரத்தம் கிடைப்பதில்லை.

இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப ஆண்டு தோறும் 12 மில்லியன் யூனிட் ரத்தம் தேவை உள்ளது. ஆனால் ஒன்பது மில்லியன் அளவிற்கு மட்டுமே ரத்தம் கிடைத்து வருகிறது. இந்தக்குறையை போக்கும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

ஆய்வில் வெற்றி

டாக்டர் சோமா குகதகுர்தா தலைமையிலான , குழுவினர் ஆராய்ச்சிக்கு மத்திய அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதி ஒதுக்கியது. தொடர்ந்து மூன்றாண்டுகளாக அவர்கள் செய்த ஆராய்ச்சியின் பலனாக செயற்கை ரத்தத்தினை விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளனர்.

செலவு குறைவுதான்

இந்த செயற்கை ரத்தம் தயாரிப்பு சோதனை குறித்து விளக்கம் அளித்த டாக்டர் சோமா, " ரத்தம் தேவைப்படுபவரின் ஸ்டெம் செல்களில் இருந்து பாதிக்கப்பட்டவருக்கு தேவையான ரத்த செல்கள் தயாரிக்கப்படும். இந்த செயற்கை ரத்தம், ரத்த வங்கிகளில் இருந்து வாங்கும் ரத்தத்திற்கு ஆகும் செலவில் பாதி மட்டுமே ஆகும் என்றார். அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து ரத்த வங்கிகளிலும் செயற்கை ரத்தம் எளிமையாக கிடைக்கும் எனவும் டாக்டர் சோமா தெரிவித்துள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது

இது வரை ரத்த வெள்ளை அணுக்களை 40 சதவீதம் உற்பத்தி செய்யும் சோதனைகளே நடைமுறையில் இருந்து வந்தது. இந்த செயற்கை ரத்தம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும், பாதுகாப்பான அதே சமயம் நோய் தொற்று இல்லாததாகவும் இருக்கும். அறுவை சிகிச்சைகளின் போதும் இவற்றை பயன்படுத்த முடியும் என்றும் டாக்டர் சோமா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விலங்குகளில் பரிசோதனை

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள செயற்கை ரத்தம் விலங்குகளில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு மனிதர்களில் சோதனைக்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் விபத்துக்களின் போது போதிய ரத்தம் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புக்கள் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது.

இறுதி கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற பிறகு செயற்கை ரத்தத்தை பெருமளவில் தயாரிக்க ஐ ஐ டி.,யின் பயோ டெக்னாலஜி துறை முடிவு செய்துள்ளது.

English summary
IIT-Madras scientists have blood on their hands — and nobody is complaining. A team of scientists from the department of engineering design has been successful in creating enough red blood cells from stem cells to be used as ‘artificial blood’ in people who need transfusion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X