For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வழக்கு விசாரணையில் குறட்டைவிட்டு தூங்கிய ரஷ்ய ஜட்ஜ்....ராஜினாமா!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மாஸ்கோ: வழக்கு விசாரணையின் போது எதிர்கட்சிக்காரரின் வாதத்தை கேட்காமல் தூங்கி வழிந்த ஜட்ஜ் ஒருவர் கடுமையான விமர்சனத்திற்குப் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் உள்ள பிளாகோவேஷ்சென்ஸ்க் கோர்ட்டில் நீதிபதியாக உள்ளவர் யெவ்கெனி மக்னோ. கடந்த ஜுலை மாதம் இவர் நீதிபதியாக பணியாற்றும் நீதிமன்றத்தில் நடந்த பொருளாதார குற்றம் தொடர்பான வழக்கு ஒன்றில், குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞர் காரசாரமாக வாதாடிக்கொண்டிருந்தார்.

அவரின் வாதத்தை பதிவு செய்துக்கொள்ள வேண்டிய நீதிபதியோ, தனது இருக்கையில் சொகுசாக அமர்ந்து குறட்டைவிட்டு உறங்கிக் விட்டார்.

பின்னர் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சமீபத்தில் அந்த நீதிபதி தீர்ப்பளித்தார்.

அந்த வழக்கை நீதிபதி விசாரித்த லட்சணம் குறித்து அவர் குறட்டை விட்ட வீடியோ காட்சிகளுடன் ஒரு இணையதள பத்திரிகை விமர்சித்து இருந்தது.

இந்த வீடியோவை பார்த்த நீதிமன்ற ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நீதிபதி யெவ்கெனி மக்னோவை ராஜினாமா செய்யும்படி அறிவுறுத்தினர். இதனையடுத்து, தலைமை நீதிபதியிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று வழங்கினார்.

English summary
A Russian judge was asked to resign after dozing off during a criminal trial and then sentencing the defendant to five years behind bars.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X