For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''ஹேப்பி பர்த்டே ஃபேஸ்புக்''!!

By Siva
Google Oneindia Tamil News

Mark Zuckerberg
பெங்களூர்: சமூக வளைதலமான ஃபேஸ்புக் துவங்கப்பட்டு 9 ஆண்டுகள் முடிந்துவிட்டன.

சமூக வலைதளமான ஃபேஸ்புக் கடந்த 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி துவங்கப்பட்டது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்த மார்க் ஜக்கர்பர்க் மற்றும் அவரது 4 நண்பர்களால் துவங்கப்பட்ட ஃபேஸ்புக்கில் 1 பில்லியன் பேர் உள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய உலகில் ஃபேஸ்புக் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. சாப்பிடப் போவது, தூங்குவது, ஏன் கொட்டாவி விடுவது முதல் அனைத்தையும் ஃபேஸ்புக்கில் தெரிவிக்கின்றனர். ஃபேஸ்புக்கால் பல திருமணங்கள் முறிவில் முடிந்துள்ள சம்பவங்களும் நடந்துள்ளன. கணவன் ஃபேஸ்புக்கில் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸில் சிங்கிள் என்று போட்டதற்காக கொந்தளித்த மனைவிகளும் உண்டு.

மும்பையில் ஃபேஸ்புக்கில் சிவசேனா தலைவர் பால் தாக்கரே மறைந்தபோது மும்பையில் இருந்த சூழல் பற்றி கமெண்ட் போட்ட பெண், அதற்கு லைக் கொடுத்த பெண் கைதானார்கள். அப்பொழுது தான் ஓ, ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டால், லைக் கொடுத்தால் கைது செய்யப்படுவோம் என்பதே தெரிய வந்தது.

இப்படி நவீன உலகில் வாழும் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக உள்ள ஃபேஸ்புக் துவங்கப்பட்டு 9 ஆண்டுகள் ஓடிவிட்டன.

English summary
Facebook, the most popular social networking site founded by Mark Zuckerberg turned 9 on february 4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X