For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்ய பாஜகவில் ஏன் இப்படி ஒரு அவசரம்?: சரத் யாதவ்

By Chakra
Google Oneindia Tamil News

Sharad yadav
டெல்லி: கடந்த 60 ஆண்டுகளில் பிரதமர் பதவிக்கு இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான அவசரம் காட்டப்பட்டதை நான் பார்த்ததே இல்லை என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவரும், பாஜக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான சரத் யாதவ் கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று பாஜகவில் குரல்கள் வலுப்பட்டு வருகின்றன. ஆனால், இதை ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவும், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் கடுமையாக எதிர்க்கின்றனர்.

இது குறித்து சரத்யாதவ் கூறுகையில், பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் அவசரம் காட்ட வேண்டிய அவசியமே இல்லை. அதற்குப் பதிலாக மக்களைப் பாதிக்கும் விஷயங்களில் கட்சிகள் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக ஊழல் விவகாரம், வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளில் பாஜகவினர் கவனம் செலுத்தலாம்.

கடந்த 60 வருடத்தில் பிரதமர் பதவிக்கு இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான அவசரம் காட்டப்பட்டதை நான் பார்த்ததே இல்லை என்றார்.

English summary
Asking NDA leaders to focus on key issues confronting the nation rather than speaking on the contentious issue, NDA convenor Sharad Yadav said, “I have never seen such a mad rush for prime ministership in the last six decades.”
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X