For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி, மும்பை நகரங்கள்தான் உலகிலேயே காஸ் ஆப் லிவிங் கம்மியானவையாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ஆஸ்திரேலியாவின் சிட்னியும் மெல்போர்ன் நகரமும் உலகிலேயே அதிக செலவு வைக்கும் நகரங்களின் பட்டியலுக்குப் போய்விட்டது. இந்தியாவின் டெல்லி, மும்பை போன்ற நகரங்கள் எல்லாம் மிகவும் குறைவான செலவுள்ள நகரங்களாகிவிட்டன.

உலகில் செலவு வைக்கக் கூடிய நகரங்களாக பொதுவாக அமெரிக்கா, ஐரோப்பிய நகரங்களைத்தான் நாம் கருதிக் கொண்டிருப்போம். ஆனால் அதெல்லாம் தலைகீழாகிவிட்டது. இப்பொழுது இந்த பெருமையெல்லாம் ஆசியக் கண்டப் பக்கம் திரும்பியிருக்கிறது.அதிலும் வட அமெரிக்க நகரங்கள் எல்லாம் டாப் 20-ல் கூட இடம் பிடிக்கவில்லை..

கடந்த ஆண்டுகூட ஐரோப்பிய நகரங்கள் டாப் லிஸ்டில் இடம்பிடித்திருந்தன. தற்போது இவையும் கீழே இறங்கிப் போய்விட்டது.

நம்.1. டோக்கியோ

நம்.1. டோக்கியோ

2013-ஆம் ஆண்டு சர்வேயின்படி ஜப்பான் தலைநகர் டோக்கியோதான் உலகிலேயே அதிகம் செலவு வைக்கக் கூடிய நகரமாக இருக்கிறது. கடந்த ஆண்டு நம்பர் 1 ஆக இருந்த சுவிஸின் சூரிச் நகரம் 7-வது இடத்துக்குப் போனது!

நம்பர் 2-ம் ஜப்பானுக்கே!

நம்பர் 2-ம் ஜப்பானுக்கே!

சரி 2-வது ‘செலவு வைக்க'க்கூடிய நகரம் எது? அட அதுவும் ஜப்பானின் ஒசாகா நகரம்தானாம்! ஜப்பானுக்கு அடுத்த செலவு வைக்கக் கூடிய நகரங்கள் என்ற பெருமை ஆஸ்திரேலியாவுக்குப் போய்விட்டது.

அதிரடி ஆஸ்திரேலியா

அதிரடி ஆஸ்திரேலியா

10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் அதிக எக்ஸ்பென்சிவ் நகரங்களில் டாப் 50 பட்டியலில் எந்த ஒரு ஆஸ்திரேலியா நகரமும் இடம் பெற்றது இல்லை.ஆனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி அதிக செலவு வைக்கக் கூடிய நகரங்களில் 3-வது இடத்திலும் மெல்போர்ன் நகரம் 5-வது இடத்திலும் இருக்கிறது. அப்படியானால் அமெரிக்க நகரங்கள் எந்த இடத்தில் இருக்கிறது?

என்னாச்சு அமெரிக்காவுக்கு?

என்னாச்சு அமெரிக்காவுக்கு?

அமெரிக்காவின் நகரங்கள் எதுவுமே எக்ஸ்பென்சிவ் நகரங்களின் பட்டியலில் டாப் 20 இடத்தைப் பெறவில்லை. நியூயார்க் நகரமும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும் 27வது இடத்தை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தின் கனடாவின் வான்கூவர் நகரத்துக்கு 21-வது இடம் கிடைத்திருக்கிறது. சரி இந்திய நகரங்கள் எப்படியான இடத்தில் இருக்கிறது?

ஆமா இந்திய நகரங்களோட நிலைமை?

ஆமா இந்திய நகரங்களோட நிலைமை?

இந்தியாவின் டெல்லி, மும்பை நகரங்கள் எல்லாம் ஜப்பான், ஆஸ்திரேலியா நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த செலவின நகரங்களின் பட்டியலுக்குப் போய்விட்டது. இதே பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது நேபாளத்தின் காத்மண்டு நகரமும்! பரவாயில்லையே!

English summary
The cost of living the Australian dream has surged with Sydney and Melbourne among the five most expensive cities in the world, outstripping most European and U.S. locations, according to an annual survey released on Monday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X