For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனியாவது திருந்த வேண்டும்... மத்திய அரசு, ராஜபக்சேவுக்கு கருணாநிதி 'அட்வைஸ்'

By Mathi
Google Oneindia Tamil News

karunanidhi
திருச்சி: ஈழத்தமிழர்களும், தமிழகத்து தமிழர்களும், இந்திய நாடும் சிங்கள அரசின் போக்குக்கு விட்டுவிடமாட்டார்கள் என்பதை உணர்ந்து ராஜபக்சேவும், மத்திய அரசும் திருந்தி கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திருச்சி சென்ற கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் பதில்களும்:

செய்தியாளர்: இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். இதை முன்பே கூறியிருக்கலாம் அல்லவா?

கருணாநிதி: இலங்கை தமிழர் பிரச்சினையில் நான் மட்டும் அல்ல. இலங்கை தமிழர் மீது அக்கறையுள்ள அனைத்து கட்சிகளும் இலங்கை அரசின் தவறை இந்தியா கண்டிக்க வேண்டும் என்று பலமுறை எடுத்துக்கூறி உள்ளனர்.

செய்தியாளர்: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய அரசில் இருந்து தி.மு.க. வெளியே வரவேண்டும் என்று கூறி உள்ளாரே?

கருணாநிதி: நாங்கள் வெளியே வந்தால் அவர்கள் உள்ளே செல்ல தயாராக இருக்கிறார்கள்.

செய்தியாளர். ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து கட்சிகளும் போராட்டம் அறிவித்து உள்ளதே

கருணாநிதி:
தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு தகுந்தபடி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈழத்தமிழர்களும், தமிழகத்து தமிழர்களும், இந்திய நாடும் சிங்கள அரசின் போக்குக்கு விட்டுவிடமாட்டார்கள் என்பதை உணர்ந்து ராஜபக்சேவும், மத்திய அரசும் திருந்தி கொள்ள வேண்டும் என்றார் அவர்.

English summary
DMK leader Karunanidhi has said Centre and Mahinda Rajapaksa should change the policy on Sri Lankan Tamil issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X