For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனர்களுக்கு இந்தியாவில் உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தங்கள் நாட்டினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.

டெல்லியை அடுத்த குர்கானில் பணிபுரிந்து வரும் சீனா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தம்மை ஒருவர் ஜனவரி 30-ந் தேதியன்று விருந்து நிகழ்ச்சியில் தாரிக் சேக் என்பவர் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அந்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் சீன நாட்டினரது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பாலியல் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாத வகையில் தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் இந்த வழக்கில் கவனமெடுத்துக் கொள்ளுமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

English summary
China on Friday asked India to enhance protection of its citizens in the wake of rape of a Chinese girl in the national capital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X