For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னாச்சு காவிரி நீருக்கு? 4 நாட்களாகியும் தமிழகத்துக்கு வரவில்லை!

By Mathi
Google Oneindia Tamil News

Cauvery
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட்டு 4 நாட்களாகியும் இன்னமும் தமிழகத்துக்கு வந்து சேரவில்லை.

கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற 9 டி.எம்.சி. நீரை திறந்துவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2.44 டி.எம்.சி. நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.

கர்நாடகாவோ உடனே நீரை திறக்காமல் 4 நாட்களுக்கு முன்புதான் திறந்துவிட்டது. வழக்கமாக கர்நாடகாவில் திறக்கபப்டும் காவிரி நீர் 48 மணிநேரத்தில் தமிழக எல்லையான பிலிகுண்டுவை வந்தடையும். ஆனால் தற்போது 4 நாட்களாகியும் இன்னமும் பிலிகுண்டுவை காவிரி நீர் வந்து சேரவில்லை.

காவிரியில் மிகக் குறைவான நீரை கர்நாடகா திறந்துவிட்டிருப்பதுடன் காவிரி வரும் பகுதியில் வறண்ட பூமியானது அதிக நீரை உறிஞ்சி விடுவதுதான் இந்த தாமதத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதனால் பிலிகுண்டுவில் அதிகாரிகள் முகாமிட்டு காவிரி நீருக்காக காத்திருக்கின்றனர்.

English summary
After 4 days Karnataka relase Cauvery water till not to reach Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X