For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காதலர் தினம் என்ற மேற்கத்திய கலாச்சாரம் தேவையில்லை: டாக்டர் ராமதாஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Ramadoss
சென்னை: காதலர் தினம் என்பது மேற்கத்திய கலாச்சாரத்தோடு தொடர்புடையது. இந்தியாவில் பரிசுப் பொருள் விற்பனைக்காக கொண்டாடுகின்றனர் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்ற திருமணவிழாவில் தலைமையேற்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

காதலர் தினம் மூலம் மோசமான மேற்கத்திய கலாசாரத்தை உருவாக்குகிறார்கள். இளைய தலைமுறையினரிடம் வக்கிர உணர்வை உருவாக்கிறார்கள். நல்ல தினங்கள் ஐ.நா. மூலம் பல அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் காதலர் தினம் என்ற இந்த நச்சு கலாச்சாரத்தை பரப்பி கடற்கரை, பூங்காக்களில் கூடுங்கள், ஜாலியாக சுற்றுங்கள் என்று தவறான உணர்வுகளை ஊட்டி ஊக்கப் படுத்துகிறார்கள்.

ஒருதலைக்காதலால் நேற்று ஒரு வினோதினி சாகடிக்கப்பட்டுள்ளார். வாலன்டைன் என்ற பாதிரியார் திருமணம் செய்யக்கூடாது என்ற சட்டத்தை மீறியதால் அவரது நினைவாக காதலர் தினத்தை அந்த நாடுகளில் கொண்டாடுகிறார்கள்.

இந்தியாவை தவிர வேறு எங்கும் கொண்டாடுவதில்லை. வர்த்தக ரீதியாகவும் பரிசு பொருட்கள் விற்பனைக்காகவும் நம் நாட்டில் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்கிறார்கள். இதை எல்லாம் சொன்னால் என்னை விமர்சிக்கிறார்கள்.

எனக்கு சமூக அக்கறை உள்ளது. எனவே சொல்கிறேன். நமது மண்ணை காப்பாற்ற வேண்டும். மக்கள் வாழ்வுரிமை காப்பாற்றப்பட வேண்டும். குடி இல்லாத நல்ல குடிமக்கள் உருவாக வேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

English summary
PMK founder Dr Ramadoss has said that western culture like valentine's day is not suitable for our country and slammed the celebration of lovers day in India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X