For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காதலியைச் சுட்டுக் கொன்றதாக தென் ஆப்பிரிக்க பாராலிம்பிக் வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸ் கைது

Google Oneindia Tamil News

Oscar Pistorius
ஜோஹன்னஸ்பர்க்: பிளேட்ரன்னர் என்றும் ஆச்சரிய மனிதர் என்றும் அனைவராலும் வியந்து பாராட்டப்பட்ட தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாராலிம்பிக் வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸின் செயலால் அனைவரும் அதிர்ந்து போயுள்ளனர்.

தனது காதலியை சுட்டுக் கொன்றதாக பிஸ்டோரியஸை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டன் பாராலிம்பிக் போட்டியில் அனைவரையும் அதிசயிக்க வைத்தவர் பிஸ்டோரியஸ். இரு கால்களும் இல்லாத இவர் கார்பன் இழை பிளேடுகள் பொருத்தப்பட்ட கால்களுடன் மின்னல் வேகத்தில் ஓடி அனைவரையும் வியக்க வைத்தார். இதனால்தான் இவருக்கு பிளேட் ரன்னர் என்று பெயர் வந்தது.

இந்த நிலையில் பிஸ்டோரியஸ் தனது காதலியை சுட்டுக் கொன்று விட்டதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதலி என்று தெரியாமல் தனது வீட்டுக்குள் யாரோ ஊடுறுவி விட்டதாக கருதி அவர் சுட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து பிஸ்டோரியஸை போலீஸார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க ஊடகங்கள்தான் செய்தி வெளியிட்டுள்ளன. காவல்துறை தரப்பில் எந்த உறுதிப்படுததலும் இதுவரை வெளியாகவில்லை.

இரு கால்களும் இல்லாத நிலையில் பிளேட் கால்கள் பொருத்திக் கொண்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட முதல் வீரர் பிஸ்டோரியஸ்தான். பிஸ்டோரியஸ் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

கடந்த ஆண்டு இவரை உலகின் 100 மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய மனிதர்கள் பட்டியலில் இடம் கொடுத்திருந்தது டைம் பத்திரிக்கை என்பது நினைவிருக்கலாம்.

காதலியைக் கொன்றதாக பிஸ்டோரியஸ் கைதாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
South Africa's Paralympic gold medallist Oscar Pistorius has been arrested after shooting dead his girlfriend having mistaken her for an intruder, media reported on Thursday. According to the Beeld newspaper, Pistorius was arrested early Thursday following the shooting. Police could not immediately confirm the report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X