For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசிதழில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு- காவிர் நீர் திறப்பதை நிறுத்தியது கர்நாடகா!

By Mathi
Google Oneindia Tamil News

மாண்டியா: காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்ட நீரை நிறுத்தியிருக்கிறது கர்நாடகா.

கர்நாடகாவின் எதிர்ப்பை மீறி உச்சநீதிமன்றம் கொடுத்த நெருக்கடியினால் அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியிடப்படது. ஆனால் கர்நாடகாவிலோ மத்திய அரசு தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறி கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையைச் சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவப்படி அணையிலிருந்து கடந்த 9ந் தேதி தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரை கர்நாடகம் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு நீரை திறந்துவிட்டதன் மூலம் அணையின் நீர்மட்டம் 6 அடியாக குறைந்துள்ளது. கிருஷ்ராஜசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 74 அடியாக உள்ளது.

English summary
The Karnataka government has stopped the release of Cauvery waters to Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X