For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

23ல் கச்சத்தீவில் புனித அந்தோனியார் திருவிழா: 3,459 இந்தியர்கள் பங்கேற்பு

By Siva
Google Oneindia Tamil News

Kachativu
ராமேஸ்வரம்: வரும் 23ம் தேதி கச்சத்தீவில் நடக்கும் புனித அந்தோனியார் திருவிழாவுக்கு செல்ல தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 3,459 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

வரும் 23ம் தேதி அதாவது நாளை மறுநாள் ராமேஸ்வரம் அருகே உள்ள கச்சத்தீவில் புனித அந்தோனியார் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு செல்ல 3,459 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,500 பேரும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 2,000 பேரும், பிற மாநிலங்களைச் சேர்ந்த 32 பேரும் அடக்கம்.

அவர்கள் அனைவரும் 82 படகுகள் மற்றும் 33 நாட்டுப் படகுகளில் கச்சத்தீவுக்கு செல்கின்றனர். அவர்கள் செல்லும் படகுககள் பயணத்திற்கு தகுதியானவையா என்று மீன்வளத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மேலும் திருவிழாவுக்கு செல்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.

கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல முதலில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பின்னர் அவை தளர்த்தப்பட்டன.

English summary
3,459 persons from TN and other states are going to Kachativu to attend the St. Anthony's church festival there on february 23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X