For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்!

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறார் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி.

உலகப் பெரும் பணக்காரர்களை அவர்களின் சொத்து மதிப்பின்படி பட்டியலிடும் 'போர்ப்ஸ்' பத்திரிகை இந்த ஆண்டின் பணக்காரர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது.

முதல் 21 இடங்களில் இந்திய கோடீஸ்வரர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்தப் பட்டியலின்படி, 21.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய சொத்துகளை வைத்திருக்கும் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தை தொடர்ந்து 6வது ஆண்டாக தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் முதலிடம் என்றாலும் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷுக்கு 22வது இடம் கிடைத்துள்ளது.

லட்சுமி மித்தல்

லட்சுமி மித்தல்

அவரையடுத்து, 16.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துகளுடன் லட்சுமி மித்தல் இரண்டாம் இடத்தை கைப்பற்றியுள்ளார்.

உலகின் டாப் 5 பில்லியனேர்கள்

உலகின் டாப் 5 பில்லியனேர்கள்

போர்ப்ஸ் அறிவித்துள்ள இந்தப் பட்டியலில் 1,426 கோடீஸ்வரர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 5.4 ட்ரில்லியன் டாலர்கள். கடந்த ஆண்டு இது 4.6 ட்ரில்லியன் டாலர்களாக இருந்தது.

கார்லோஸ் ஸ்லிம் ஹூலு

கார்லோஸ் ஸ்லிம் ஹூலு

உலகின் முதல் பணக்காரராக மெக்சிகோவின் தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் ஹூலு பட்டியலிடப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 73 பில்லியன் அமெரிக்க டாலர்கள். லத்தீன் அமெரிக்க தொலைத் தொடர்புத் துறையையே தன் வசம் வைத்திருப்பவர், சில்லறை வர்த்தகத்தில் முதல் நிலை நிறுவனத்துக்கு சொந்தக்காரர் மற்றும் பல தொழில்களுக்கு சொந்தக்காரர். தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார்.

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரான பில் கேட்ஸூக்கு அறிமுகம் தேவையில்லை. அவரது சொத்து மதிப்பு 67 பில்லியன் டாலர்கள். பில் அண்ட் மலின்டா கேட்ஸ் பவுண்டேஷனுக்கு பல பில்லியன் டாலர்களை இவர் எழுதி வைத்த பிறகும் தொடர்ந்து முன்னணியில் உள்ளார்.

அமான்சியோ ஒர்டேகா

அமான்சியோ ஒர்டேகா

உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் இந்த அமான்சியோ ஒர்டேகா. உலகம் முழுக்க உள்ள ஜரா ஸ்டோர்ஸ்களின் சொந்தக்காரர். இவரது நிறுவனங்களின் முதலீட்டு மதிப்பு 84 பில்லியன் டாலர்கள். இவரது சொத்து மதிப்பு 57 பில்லியன் டாலர்கள்.

வாரன் பஃபே

வாரன் பஃபே

அமெரிக்காவின் நெப்ராஸ்காவைச் சேர்ந்த முதலீட்டாளர் இவர். பெர்க்ஷையர் ஹதாவே நிறுவனத் தலைவர். இந்தியாவிலும் கூட முதலீடுகளை ஆரம்பித்துள்ளார். மொத்த சொத்து மதிப்பு 53.3 பில்லியன் டாலர்கள்.

லாரி எல்லிஸன்

லாரி எல்லிஸன்

உலகின் 5வது பெரும் பணக்காரர் என்ற இடம் ஆரக்கிள் நிறுவனத்தின் சிஇஓ லாரி எல்லிசனுக்குக் கிடைத்துள்ளது. இவரது சொத்து மதிப்பு 43 பில்லியன் டாலர்கள்.

English summary
After a year in which the the "Occupy Wall Street" movement decried the growing wealth of the so-called "One Per cent" at the expense of the many, the Forbes annual list once again pointed to more billionaires amassing more money. While Carlos Slim tops among the world billionaires, Mukesh Ambani tops among Indians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X