For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டணியில் இருந்து விலகல் எதிரொலி: பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்த திமுக அமைச்சர்கள்

By Siva
Google Oneindia Tamil News

After pulling out of UPA, DMK ministers to resign today
டெல்லி: மத்திய அரசு மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று திமுக அறிவித்தது. இதையடுத்து திமுக அமைச்சர்கள் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக இருப்பதாகவும், இது குறித்த திமுகவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டினார். இதையடுத்து மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் விலகுவதாக கருணாநிதி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து திமுக அமைச்சர்கள் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். திமுகவின் 5 மத்திய அமைச்சர்களில் முக அழகிரி மட்டும் கேபினட் அமைச்சராக இருந்தார், மற்றவர்கள் இணை அமைச்சர்கள்.

திமுகவுக்கு லோக்சபாவில் 18 எம்.பி.க்களும், ராஜ்யசபாவில் 6 எம்.பி.க்களும் உள்ளனர்.

English summary
DMK MPs are likely to meet PM Manmohan Singh at 10.30 am and to submit their resignation after their party head announced walk out from UPA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X