For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நோ டயட்... வரப்போகுது உடம்பை குறைக்கும் 'மைக்ரோ சிப்'

Google Oneindia Tamil News

லண்டன்: உடல் பருமனை குறைக்க உதவும் மைக்ரோ சிப் மின்னனுக் கணினிச் சில்லு ஒன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும் அதை விரைவில் முழுமையாக ஆய்வு செய்த பின் வெளியிடும் போது மனித குலத்திற்கே பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று லண்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் மைக்ரோ சிப்களை உடலில் பொருத்திக் கொண்டவருக்கு அதிகம் பசிக்காது என்பதால் அறுவை சிகிச்சையெல்லாம் செய்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

வேகஸ்க்கு இனி வேலையில்லை....

வேகஸ்க்கு இனி வேலையில்லை....

மூளைக்கு பசியை உணர்த்துவதிலும் உடலின் வேறு பல வேலைகளைக் கட்டுப்படுத்துவதிலும் உதவுவது வேகஸ் நர்வ்ஸ் எனப்படும் நரம்பு. அதுல சேர்ந்து இருப்பதுபோல இந்தச் சிப் உடலில் பொருத்தப்படப்போகுதாம்.

பரிசோதனை ....

பரிசோதனை ....

இப்போ விலங்குகளிம் இந்தக் கண்டுபிடிப்பைப் உபயோகித்துப் பார்க்கும் பரிசோனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாம்.

மூணே வருஷந்தான்...

மூணே வருஷந்தான்...

மூன்று ஆண்டுகளில் மனிதர்களிடமும் இவை பரிசோதிக்கப்படும் என்று இது சம்பந்தமான ஆய்வுகளைச் செய்துவரும் லண்டன் இம்பீரியல் காலேஜைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ் டூமாஸு மற்றும் பேராசிரியர் சர் ஸ்டீஃபன் ஆகியோர் கூறுகின்றனர்.

மூலைக்கு சிக்னல்...

மூலைக்கு சிக்னல்...

வேகஸ் நரம்புகளில் பொருத்தப்பட்ட இந்தச் சிப்புகள் பசி தொடர்பான இரசாயன அறிகுறிகளை புரிந்துகொள்ளும் என்றும், அதிகமான பசியை உணர்த்தாத வகையில் மூளைக்கு மின்னனு சமிக்ஞைகளை அனுப்புமாம்.

கொஞ்சமா சாப்பிடு...

கொஞ்சமா சாப்பிடு...

அளவாகவும் மெதுவாகவும் சாப்பிட வைப்பது போல இந்த சிப்புகள் மூலம் மூளைக்கு சமிக்கைளை அனுப்ப முடியும் என்று கூறும் பேராசிரியர் டூமாஸூ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

’காக்கா’ சிப்ஸ்...

’காக்கா’ சிப்ஸ்...

காக்காய் வலிப்பைக் கட்டுப்படுத்துவதில் உதவக்கூடிய வகையில் வேகஸ் நரம்புகளில் பொருத்தப்படும் மைக்ரோச்சிப் சில்லுகளை இதே இம்பீரியல் காலேஜ் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே உருவாக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..!

English summary
UK-based scientists have designed an ‘intelligent’ microchip which they claim can suppress appetite.Animal trials of the electronic implant are about to begin and its makers say it could provide a more effective alternative to weight-loss surgery.The chip is attached to the vagus nerve which plays a role in appetite as well as a host of other functions within the body.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X