For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் ஒரு போலி நாடு, 20 வருடங்களில் இந்தியாவுடன் இணைந்து விடும்- கட்ஜு

Google Oneindia Tamil News

Markandey Katju
ஐதராபாத்: பாகிஸ்தான் ஒரு போலி நாடு. இன்னும் 20 ஆண்டுகளில், வங்காள தேசம், பாகிஸ்தான் இரண்டும் இந்தியாவுடன் இணைந்து விடும் என மார்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற ஊடகத்துறை தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு கூறியதாவது:-

செயற்கையாக பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கிய ஆங்கிலேயர்கள், இந்தியா எந்த வகையிலும் பலம் வாய்ந்த நாடாக,தொழில்மயமான நாடாக வளர்ந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்து-முஸ்லிம்களிடையே சண்டையை ஏற்படுத்தினார்கள். எனவே, பாகிஸ்தான் என்பதே ஒரு போலி நாடுதான்.

வங்காள தேசம், பாகிஸ்தான் எல்லாமே ஓர் நாளில் இந்தியாவுடன் இணைந்து விடும். இதற்கு 15 அல்லது 20 ஆண்டுகள் ஆகலாம். நம்மை பிரித்தவர்கள் அவ்வளவு சுலபத்தில் நம்மை இணைய விடமாட்டார்கள். 1857ம் ஆண்டு வரை நம் நாட்டில் மதச்சார்பற்ற நிலையே நீடித்து வந்தது.

ஆனால், இந்துக்களில் 80 சதவீதம் பேரும், முஸ்லிம்களில் 80 சதவீதம் பேரும் தற்போது மதம் சார்ந்த நிலையில் தான் வாழ்ந்து வருகின்றனர் என்பது கசப்பான உண்மையாக உள்ளது.

சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகள், இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் என எல்லா நாடுகளிலும் தொடர்ந்துக் கொண்டுதான் உள்ளன', இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Pakistan is "a fake country", and one day will reunite with India along with Bangladesh, Press Council of India (PCI) chairperson Justice (retd) Markandey Katju said here on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X