For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட் வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று நடைபெறுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிலிருந்து வெளியேறிய விஷவாயுவால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஆலையை மூடக்கோரி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 30ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து, சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது. இந்த வழக்கில் பொதுமக்கள் சார்பாகவும், ஆலை நிர்வாகத்துக்கு எதிராகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி வாதிட உள்ளார்.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆலையை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில் தேசிய பசுமைத் தீர்பாயம் வழங்கும் தீர்ப்பினை தூத்துத்துக்குடி மாநகர பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

English summary
The Sterlite Industries (India) Ltd has petitioned the National Green Tribunal, Southern Bench, seeking to set aside the order of the Tamil Nadu Pollution Control Board (TNPCB) shutting its copper smelter plant in Thoothukudi. In this case hearing today on the NGT.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X