For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருநங்கைகளின் திருவிழா: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் தொடங்கியது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கண் திறப்பு நிகழ்ச்சி வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.

லட்சக்கணக்காண திருநங்கைகள் கூடும் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் செவ்வாய்கிழமை சாகைவார்த்தலுடன் சித்திரை பெருவிழா துவங்கியது.

விழாவை முன்னிட்டு கூவாகம், தொட்டி, நத்தம், அண்ணாநகர் உட்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பெண்கள் கஞ்சி கலயங்களை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படையலிட்டனர்.

மகாபாரதக் கதை

மகாபாரதக் கதை

மகாபாரத போரில் அரவான் (கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுபடுத்தும் வகையில், இக்கோவில் சித்திரை பெருவிழாவின் 16ம் நாளில் அழுகளம் நிகழ்ச்சி நடப்பதால் கூவாகம், பெரியசெவலை, திருவெண்ணெய்நல்லூர், கொரட்டூர் உட்பட பல்வேறு கிராம மக்கள் நேற்று முதல் 18 நாட்களுக்கு சுப நிகழ்ச்சிகள் செய்வதைத் தவிர்த்துவிடுவர். இதே வேளையில் கூத்தாண்டவர் நினைத்ததை நிறைவேற்றுவதால் அவரை பக்தியுடன் வழி படுகின்றனர்.

தாலி கட்டும் திருநங்கைகள்

தாலி கட்டும் திருநங்கைகள்

விழாவின் முக்கிய திருவிழாவாக 23ம் தேதி இரவு சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மும்பை, சென்னை, டில்லி, கல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் இருந்து வரும் திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர்.

அரவாண் களப்பலி

அரவாண் களப்பலி

வரும் 24ம் தேதி காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு நடக்கும் அழுகளம் நிகழ்ச்சியில் திருநங்கைகள் தங்கள் அணிந்திருந்த தாலிகளை அறுத்தெறிந்து விதவைக் கோலம் பூண்டு அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்து விட்டு தங்கள் ஊருக்கு திரும்புவர். மாலை 5 மணிக்கு உறுமைசோறு (பலிசாதம்) படையல் நடக்கிறது.

குழந்தைப் பேறு கிடைக்கும்

குழந்தைப் பேறு கிடைக்கும்

இதை வாங்கி சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பதால் பக்தர்கள் முண்டியடித்து வாங்குவர். இரவு 7 மணிக்கு காளிக்கோவிலில் அரவான் உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் அரவான் சிரசு மட்டும் பந்தலடிக்குச் கொண்டு வரப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்வித்து நத்தம், தொட்டி வழியாக கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும். தொடர்ந்து 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.

English summary
Koovagam, the largest transgender festival in India, and in Asia, has opened in the eponymous village near the south Indian town of Villupuram, roughly 160 km southwest of Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X