For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு எதிராக போராட்டம்… உருவபொம்மை எரிக்க முயன்ற பாமகவினர் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி மக்களைப் பற்றி கவலையில்லை என்று கூறி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு ஆதரவாக பேட்டியளித்தவர்களுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உருவபொம்மையை எரிக்க முயன்ற பாமகவினரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற பந்த் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிர்வாகிகள் நேற்று மாலை தொழிற்சாலையின் ஒப்பந்தக்காரர் தியாகராஜன் மகளிர் தொண்டு நிறுவனங்களின் சார்பில் ஆலைக்கு ஆதரவான பேட்டியை நிருபர்களுக்கு அளித்தனர். எங்களை பொறுத்தவரை தொழிற்சாலையின் 2ஆயிரம் பணியாளர்கள் தான் முக்கியம், 2லட்சம் மக்களை பற்றி கவலை இல்லை என்று அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

PMK cadres arrested in Tuticorin
இதனைக்கண்டித்து தூத்துக்குடி மாவட்ட பாமக செயலாளர் கிறிஸ்டி தலைமையில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பேட்டி அளித்த ஒப்பந்தக்காரர் தியாகராஜன், மகளிர் தொண்டு நிறுவனத்தின் தனலட்சுமி ஆகியோரின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் உருவபொம்மையை பறிமுதல் செய்ததோடு போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவின் மகளிரணியினர் உட்பட 15 பேரையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
PMK cadres were arrested in Tuticorin after they protested against Sterlite industries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X