For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிங்கள வெறியர்கள் மீண்டும் தாக்குதல் - 8 தமிழக மீனவர்கள் படுகாயம்

Google Oneindia Tamil News

நாகப்பட்டனம்: சிங்களக் கடற்படையினர் மீ்ண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் தாக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டனம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (30), மாரியப்பன் (28), விஜயகுமார் (30), சவுந்தரராஜன் (45) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் ஒரு பைபர் படகில் கோடியக்கரைக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

கோடியக்கரை அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகை சுற்றிவளைத்து 4 பேரையும் கயிறு மற்றும் மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் படகில் இருந்த திசைகாட்டும் கருவி, செல்போன், கயிறு, மீன்பிடி வலைகள், ஐஸ் பெட்டி உள்ளிட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களையும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். காயமடைந்த 4 பேரும் வெள்ளப்பள்ளம் வந்து சேர்ந்தனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் 4 பேரையும் நாகப்பட்டனம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 4 பேர் மீது தாக்குதல்

இதேபோல நாகப்பட்டினத்தை அடுத்த வனவன்மகாதேவி பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடிக்க சென்றனர். அப்போது அவர்களை அங்குவந்த இலங்கை கடற்படையினர் கட்டைகளால் தாக்கினர். படகில் இருந்த மீன்களை அள்ளி கடலுக்குள் வீசினர்.

நேற்று பிற்பகல் அந்த 4 பேரும் கரைக்கு திரும்பினர். அவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மாவட்ட கலெக்டர் முனுசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

English summary
8 Tamil Nadu fishermen were injured in Lankan navy attack near Indian waters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X