For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெனிசுலா அதிபராக பதவியேற்றார் நிகோலஸ் மதுரோ... சர்ச்சை முடிவுக்கு வந்தது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Nicolas Maduro
கராகஸ்: வெனிசுலாவின் புதிய அதிபரான நிகோலஸ் மதுரோ பதவியேற்று கொண்டார்.

வெனிசுலா அதிபராக இருந்த ஹியூகோ சாவேஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி வெனிசுலா அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பேருந்து ஓட்டுநராக இருந்து அரசியல் களம் புகுந்த நிகோலஸ் மதுரோவை, வெனிசுலா-வின் முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸ், தனது வாரிசாக அறிவித்தார். இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் அதிபர் பதவியை அலங்கரிக்கிறார் மதுரோ.

தலைநகர் கரகாஸில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்ற வண்ணமையமான நிகழ்ச்சியில் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை நிகோலஸ் மதுரோ ஏற்று கொண்டார்.

அப்போது முப்படைகள் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் வெற்றி முழக்கமிட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஈரான் அதிபர் மெஹ்மூத் அஹ்மதெனிஜாத் பொலிவியா அதிபர் எவோ மொரலெஸ் பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃப் , அர்ஜெண்டினா அதிபர் க்ரிஸ்டினா ஃபெர்னாண்டஸ் உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பதவியேற்புக்குப் பின்னர் பேசிய மதுரோ, வெனிசுலா அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால், இதனை ரத்து செய்துவிட்டு புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தை வரவேற்றார்.

English summary
Venezuelan president Nicolás M aduro was pushed from the microphone as he delivered his inaugural address on Friday, shocking a nation that is slowly returning to normal after a week of protests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X