For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கம் வாங்குபவர்கள் சீக்கிரம் வாங்குங்க: மீண்டும் ஏறுகிறது விலை

By Siva
Google Oneindia Tamil News

Gold price on the increasing mode
சென்னை: குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

கடந்த 11ம் தேதி முதல் ஒரு வார காலம் தங்கத்தின் விலை ஓரேயடியாக சரிந்து வந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தங்கத்தின் விலை குறைந்த கையோடு அதை வாங்கி வைத்துவிட வேண்டும் என்று மக்கள் நினைத்தனர். இதையடுத்து மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை வாங்கத் துவங்கினர்.

இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் தங்க விலை சரிந்த பிறகு விற்பனை அதிகரித்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.
நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.20,116க்கு விற்பனையானது. இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரித்து பவுன் ரூ.20,288க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 அதிகரித்து ரூ.2,536 ஆக உள்ளது.

வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.175 குறைந்து ரூ.44,675 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 47.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

English summary
Gold price continues to increase slowly. A sovereign gold price has increased by Rs. 120 on tuesday morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X