For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோவின் நடைபயணத்தில் ''கிராஸ்' செய்த பாம்பு! லாவகமாக பிடித்த 'தமிழ்நாட்டு புருஸ்லி'!

By Mathi
Google Oneindia Tamil News

பொள்ளாச்சி: பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொண்டு வரும் நடைபயணத்தின் போது ஐந்தரைடி நீள பச்சைப் பாம்பு 'கிராஸ்' செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதை லாவகமாக பிடித்த மதிமுக மாணவர் அணியின் நந்தனை 'தமிழ்நாட்டின் புருஸ்லி' என்று வைகோ பாராட்டினார்.

பூரண மதுவிலக்கு கோரி 3ம் கட்டமாக கடந்த 16-ந் தேதி முதல் பொள்ளாச்சியில் இருந்து வைகோ நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நடைபயணத்தில் 11ம் நாளான நேற்று காலை 7.00 மணியளவில் சென்னிமலையில் தொடங்கியவர்கள் நண்பகலில் வெள்ளோட்டில் மதிய உணவை முடித்துவிட்டு ஓய்வுக்குப் பின் 4.00 மணியளவில் வெள்ளோட்டில் இருந்து புறப்பட்டனர். புதுவலசு என்ற கிராமத்தில் மாலை 6.30 மணியளவில் வரும்போது நடைபயணத்திற்கு முன்பாக ஐந்தரை அடி நீளமுள்ள பச்சைப்பாம்பு குறுக்கே சென்றது.

Snkae 'cross' Vaiko's pathayathra

ப்போது மாணவர் அணியைச் சேர்ந்த நந்தன் என்பவர் உடனை அந்தப் பாம்பை பிடித்து அதன் வாயை பிடித்தவுடன் சுழன்றது. உடனே அருகில் இருந்து கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கிய மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அதன் கழுத்துப்பகுதியைப் பிடித்து அரை கி.மீ. தூரம் நடந்து வந்தார். பின்னர் சிறிய பசுமையான காட்டுப்பகுதியை அடைந்தவுடன் வைகோ, ஒரு உயிரைக் கொல்வது சரியல்ல என்று கூறி காட்டுக்குள் விடச் சொன்னார். மல்லை சத்யாவும் காட்டிற்குள் அந்த பாம்பை விட்டுவிட்டார்.

பாம்பைப் பிடித்த மாணவர் அணியைச் சேர்ந்த நந்தனை வைகோ "தமிழ்நாட்டின் புருஸ்லி " என்று கூறி பாராட்டினார்.

English summary
A Snake cross and welcom MDMK leader Vaiko who was proceeding by foot with his followers, demanding introduction of prohibition in the state near Pollachi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X