For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொடுமைப்படுத்தும் போலீஸ்.. நடவடிக்கை எடுக்க “பேஸ்புக்" கில் ஆதரவு திரட்டும் 79 வயது பெண் தியாகி!

Google Oneindia Tamil News

79-year-old widow seeks support for legal battle on Facebook!
மும்பை: தன்னைக் கொடுமைப்படுத்தும் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க உலகளாவிய அளவில் ஆதரவு திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் மும்பையைச் சேர்ந்த 79 வயது பெண் தியாகி மோகினி.

ஏற்கனவே, மும்பையைச் சேர்ந்த மோகினி கம்வானி, 79, என்ற பெண்ணுக்கும் அவர் வீட்டருகே இருக்கும் சிலருக்கும் இடையே சொத்து பிரச்சனை உள்ளது. அதை தீர்த்து வைக்கக் கோரி இந்த பெண்மணி போலீசில் முறையிட்டும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லையாம்.

அதிரடியாக, கடந்த ஆண்டு மும்பையில் நடந்த குடியரசு தின விழாவில் மோகினி கம்வானி தற்கொலைக்கு முயன்றார்.அதை அறிந்த போலீசார், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதற்கு பின்னரும் வழக்குகளைத் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றனராம்.

இதையடுத்து விரக்தி அடைந்த அப் பெண் 58 வயதான தன் மகன் திலீப் என்பவருடன் "பேஸ்புக்' இணையதளத்தின் மூலம் ஆதரவு திரட்ட ஆரம்பித்தார். சுதந்திர போராட்ட தியாகியான தன்னைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும் என "பேஸ்புக்'ல் நியூஸ் தட்டி விட்டார்.

அவரின் கோரிக்கைக்கு இதுவரை 2,400 பேர் பதிலளித்து ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.அவர்களில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பார்பரா என்பவர் உட்பட பிரபலமானவர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A 79-year-old widow has gathered support of over 2,400 followers from India and abroad on a social networking website for her legal battle against Maharashtra police officials over her “illegal arrest”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X