For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக சட்டசபை தேர்தல்: 65% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்!

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 65 சதவீதம் வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள், அதில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு வரும் 5ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட உள்ள மொத்தம் 2,948 வேட்பாளர்களில் 1,052 பேரின் சொத்துப் பட்டியலை ஆராய்ந்தபோது, இவர்களில் 681 (65 சதவீதம்) பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் முதலிடம்:

காங்கிரஸ் முதலிடம்:

இவர்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர். ஆய்வு செய்யப்பட்ட 217 காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.21 கோடி ஆகும்.

பாஜக நம்பர் டூ:

பாஜக நம்பர் டூ:

இதற்கு அடுத்த இடத்தில் சராசரியாக ரூ.10 கோடி சொத்து மதிப்புடன் 215 பா.ஜ.க. வேட்பாளர்கள் உள்ளனர்.

அடுத்த இடத்தில் எதியூரப்பா கட்சி:

அடுத்த இடத்தில் எதியூரப்பா கட்சி:

மூன்றாவது இடத்தை மாஜி முதல்வர் எதியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர்கள் பிடித்துள்ளனர். இவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ.7 கோடி ஆகும்.

பிரியா கிருஷ்ணாவுக்கு ரூ. 910 கோடி சொத்து:

பிரியா கிருஷ்ணாவுக்கு ரூ. 910 கோடி சொத்து:

மிக அதிகமான சொத்து கொண்ட கோடீஸ்வர காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலில் பெங்களூர் கோவிந்தராஜ் நகர் தொகுதி வேட்பாளர் பிரியா கிருஷ்ணா (ரூ.910 கோடி), ஹொஸ்கோட் தொகுதி வேட்பாளர் நாகராஜு (ரூ.470 கோடி), பெல்லாரி தொகுதி வேட்பாளர் அனில் லாட் (ரூ.288 கோடி) ஆகியோர் உள்ளனர்.

மதச்சார்பற்ற ஜனதா தளம்:

மதச்சார்பற்ற ஜனதா தளம்:

பெங்களூர் பசவனகுடி தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் பாகே கவுடா (ரூ.250 கோடி), கே.ஆர்.புரம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நதியேஷா ரெட்டி (ரூ.118 கோடி) ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

English summary
Crorepati candidates have a formidable presence in the Karnataka Assembly polls scheduled to be held on May 5. Out of the 1,052 candidates in fray, 681 or 65 percent are crorepatis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X