For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

''தெய்வமே...தெய்வமே''..இந்தியா, பிரேசிலுக்கு நன்றி சொல்லுமா பேஸ்புக்???

Google Oneindia Tamil News

டெல்லி: பேஸ்புக்கை இன்று வாழ வைத்துக் கொண்டிருப்பதே இந்தியாவும், பிரேசிலும்தானாம். காரணம் இங்குதான் பேஸ்புக்குக்கு நிறைய வாடிக்கையாளர்கள்.

காலையில் எழுந்ததும்.. ஹாய் பிரஷப் பண்ணப் போறேன், போய்ட்டு 'போவேன்'... என்று ஆரம்பித்து குட்நைட் கய்ஸ் என்று 'சோபர்' ஆன ஒரு நிலா படத்தைப் போட்டு தூங்கப் போவது வரை நம்மவர்களுக்கு பெரும்பாலும் பேஸ்புக் ஒரு பொண்டாட்டி/புருஷன் போலவே மாறிப் போய் விட்டது.

ஆனால் உலகம் பூராவும் இப்படி இல்லை போல.. நம்ம ஊரிலும் பிரேசிலிலும்தான் இந்த பேஸ் புக் பேய் பாதித்தவர்கள் அதிகம் உள்ளனராம்.

அதப் பத்தி பார்ப்போமா...

100 கோடி யூசர்கள்

100 கோடி யூசர்கள்

2013ம் ஆண்டின் முதல் காலிறுதியில் மாதந்தோறும் பேஸ்புக்கைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 100 கோடியாக உயரப் போகிறதாம்.

இதுக்கெல்லாம் காரணம் நீங்கதாங்க

இதுக்கெல்லாம் காரணம் நீங்கதாங்க

பேஸ்புக்கின் பயனாளர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு மிகப் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்க இந்தியர்களும், பிரேசில் நாட்டவரும்தான் முக்கியக் காரணமாம்.

இந்தியாவில் மட்டும் 7.8 கோடி பேர்

இந்தியாவில் மட்டும் 7.8 கோடி பேர்

இந்தியாவில் மட்டும் தற்போது 7.8 கோடி பயனாளர்கள் பேஸ்புக்குக்கு உள்ளனராம். இதுவே பிரேசிலில் 7.3 கோடி பேர் உள்ளனராம்.

23 சதவீதம் உயர்வு

23 சதவீதம் உயர்வு

உலக அளவில் பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை 2013, மார்ச் மாத கணக்குப்படி 23 சதவீத அளவு உயர்ந்துள்ளது.

இப்படித்தான் என்றில்லை...

இப்படித்தான் என்றில்லை...

பேஸ்புக்கை பயன்படுத்துவோர் தற்போது பல வழிகளிலும் அதை அணுகுவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. இணையதளம், மொபைல் போன்கள் என இதற்கான அணுகு வழிகள் தற்போது அதிகரித்து விட்டன.

மொபைல் பயன்பாடு அதிகரிப்பு

மொபைல் பயன்பாடு அதிகரிப்பு

மொபைல் போன்கள் மூலம் பேஸ்புக்கை அணுகுவோரின் எண்ணிக்கை சர்வதேச அளவில் அதிகரித்த வண்ணம் உள்ளதாம்.

இந்தியா, பிரேசில், அமெரிக்கா நம்பர் ஒன்

இந்தியா, பிரேசில், அமெரிக்கா நம்பர் ஒன்

மொபைல் போன்கள் மூலம் பேஸ்புக்கில் நுழைவோர் இந்தியா, பிரேசில், அமெரிக்காவில்தான் அதிகமாம்.

தினசரி 26 சதவீத உயர்வு

தினசரி 26 சதவீத உயர்வு

தினசரி பேஸ்புக்குக்கு வருவோரின் எண்ணிக்கையும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறதாம்.அதாவது இந்த அளவானது 26 சதவீதமாக உள்ளதாம்.

இதிலும் கூட அமெரிக்கா, பிரேசில், இந்தியாதான் முன்னணியில் உள்ளதாம்.

English summary
In expanding user count in India and Brazil helped the world's largest social networking site Facebook to increase its monthly active users (MAUs) to a whopping 1.11 billion in the first quarter of 2013. The ubiquitous social networking platform's MAUs rose by 23 per cent in January-March quarter of 2013 compared to the year-ago period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X