For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்புமணி ராமதாஸ், குரு மீது புதிய வழக்குகள்: மே 17வரை காவல் நீட்டிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Anbumani's custody extended till May 17 in second case
சென்னை: போலீசாரை அவதூறாக பேசியதாக பாமக இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் மீது புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் வரும் 17-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னிய சங்க சித்திரை முழுநிலவு மாநாட்டில், அனுமதித்த நேரத்தை விட அதிகம் எடுத்து கொண்டதாகவும், போலீசாரை அவதூறாக பேசியதாகவும், அன்புமணி ராமதாஸ் மீது புதிய வழக்கை மாமல்லபுரம் போலீசார் தொடர்ந்தனர்.

இதற்காக திருக்கழுகுன்றம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமறத்தில், அன்புமணி ராமதாஸ் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வரும் 17-ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டார்.

குரு மீது 4 புதிய வழக்கு

இதேபோல் வன்னிய சங்கத்தலைவர் ஜெ.குரு மீதும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், புதியதாக 4 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளில் வரும் 17-ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை திருவிழாவில் அவதூறாக பேசியதாக அன்புமணி ராமதாசும், குருவும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறி

English summary
Court has extended former union minister Anbumani Ramadoss's jail custody in a second case till May 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X