For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கையில ஒத்த பணம் இல்ல.. சொத்து ரூ11 கோடி: இதுதான் பிரதமர் மன்மோகன்சிங் சொத்து கணக்கு!

By Mathi
Google Oneindia Tamil News

குவஹாத்தி: இந்திய அரசியலில் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் கோடீஸ்வரர்கள்... பெரும்பாலான எம்.பி.கள் சொல்ல வேண்டியதே இல்லை.. இவர்கள் இப்படி எனில் இந்திய பிரதமரின் சொத்து மதிப்பு வெறும் ரூ11 கோடிதானாம்...

தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிற பிரதமர் மன்மோகன்சிங்கின் ப்தவிக்காலம் முடிவடைவதால் மீண்டும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அசாம் மாநிலத்தில் இருந்து போட்டியிடுவதற்காக நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுத்தாக்கலில் தமது சொத்து விவரங்கள் பற்றியும் விவரித்திருக்கிறார் மன்மோகன்சிங்.

கையில் ரொக்கம் ஏதும் இல்லை..

கையில் ரொக்கம் ஏதும் இல்லை..

தமக்கு ஆண்டு வருமானம் ரூ.40 லட்சத்து 51 ஆயிரத்து 964 ...ஆனால் கையில் ரொக்க்மாக ஒத்த பணமும் இல்லை...

96 ஆம் ஆண்டு மாருதி கார்

96 ஆம் ஆண்டு மாருதி கார்

தம்மிடம் 1996-ம் ஆண்டு மாடல் மாருதி கார் உள்ளது. அதன் மதிப்பு ரூ.21,033 மட்டுமே.

வங்கி டெபாசிட்டுகள்- சொத்து ரூ11 கோடி

வங்கி டெபாசிட்டுகள்- சொத்து ரூ11 கோடி

வங்கியில் 3 நிரந்தர வைப்புகள், 5 சேமிப்பு கணக்குகளில் ரூ.3 கோடியே 87 லட்சத்து 63 ஆயிரம் பணம் உள்ளது. சண்டீகரில் வீடு, தில்லியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு என ரூ.7 கோடியே 52 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அசையாத சொத்துகள் உள்ளன.

மனைவியிடம் இருப்பது எவ்வளவு?

மனைவியிடம் இருப்பது எவ்வளவு?

தமது மனைவி குருசரண் கெளரிடம் ரூ.20 ஆயிரம் ரொக்கம் உள்ளது. தங்க நகைகள், வங்கிக் கணக்குகள் என சுமார் ரூ.41 லட்சம் அசையும் சொத்துகள் உள்ளன என்று வேட்புமனுவில் தெரிவித்திருக்கிறார் மன்மோகன்சிங்.

English summary
Prime Minister Manmohan Singh does not have any cash in hand and owns a 1996 Maruti car, unlike many of his colleagues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X