For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த முறையாவது ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

TET 2013: Karunanidhi wants TN govt. to consider reservation policy
சென்னை: நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்விலாவது இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்ய முன்வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஆசிரியர் தகுதித் தேர்வு மூன்றாம் முறையாக நடத்தப்பட உள்ளது. 7 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் தேர்வு எழுதுவர் என்று எதிர்பார்ப்பதால் 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடித்து விநியோகிக்கப் போவதாகத் தெரிகிறது. தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150 ஆகும். தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். அதாவது 60 சதவீதம்.

ஏற்கெனவே இருமுறை நடத்தப்பட்ட தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால், அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது சலுகை வழங்கப்படும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தேர்ச்சி பெற அனைத்துப் பிரிவினருமே 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றுதான் வைக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் உயர் வகுப்பினரைப் போல 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஆசிரியர் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமானதாகும்.

தேசிய ஆசிரியர் கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி ஆந்திரத்தில் உயர் ஜாதியினர் 60 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் 50 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர் 40 சதவீதமும் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று உள்ளது.

அசாமில் உயர் ஜாதியினருக்கு 60 சதவீதம் என்றும், மற்றவர்களுக்கு 55 சதவீதம் என்றும் உள்ளது. ஒடிசாவில் உயர் ஜாதியினருக்கு 60 சதவீதம் என்றும், மற்றவர்களுக்கு 50 சதவீதம் என்றும் உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் அனைத்துப் பிரிவினருக்கும் 60 சதவீத மதிப்பெண்கள் என அரசு நிர்ணயித்துள்ளது, பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானதும், இடஒதுக்கீட்டு கொள்கைக்கு விரோதமானதும் ஆகும்.

எனவே நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்விலாவது இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தேர்வுக்கான மதிப்பெண்களில் மாற்றம் செய்ய முன்வர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK supremo Karunanidhi has asked the ADMK government to give importance to reservation policy in Teachers Eligibility Test.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X