For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெட்டிசன்ஸ்களே! நீங்கள் தேடுவது, பேசுவது, பார்ப்பது.ஒன்னுவிடாம கண்காணிக்குது யு.எஸ்

By Mathi
Google Oneindia Tamil News

நியூயார்க்: சமூக வலைதளங்கள், மெயில் சேவை அளிக்கக் கூடிய இணைய தளங்களில் செக்யூரிட்டி என்ற ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும்.. நாமும் நம்முடைய மெயில், சாட்டிங் எல்லாம் நமக்கு மட்டுமே ரகசியம் என நினைத்துக் கொண்டிருப்போம்.. ஆனால் கடந்த 6 ஆண்டுகாலமாக அனைத்து இணைய தள சேவைகளையும் கண்காணிக்கும் பணியை வெற்றிகரமாக செய்து வருகிறதாம் அமெரிக்கா.

வாஷிங்டன் போஸ்ட் மற்றும் தி கார்டியன் ஆகிய ஏடுகள்தான் அமெரிக்காவின் ரகசிய ஆப்பரேஷன் பற்றிய ஆவணங்களை அம்பலப்படுத்தியிருக்கின்றன. PRISM என்ற பெயரில் அமெரிக்கா எப்படியெல்லாம் இணைய தகவல்களை திரட்டியிருக்கிறது என்று விவரிக்கின்றன இந்த ஆவணங்கள்..மைக்ரோசாப்ட், கூகுள், யாகூ, ஃபேஸ்புக் என சகல இணைய சேவைகளும் அமெரிக்காவின் கண்காணிப்பு கஸ்டடியில்தான் இருக்கிறதாம்!

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

ஹாட்மெயில் உள்ளிட்ட சேவைகளை வழங்கக் கூடிய மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த்ட 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந் தேதி அமெரிக்காவின் இந்த PRISM ஆப்பரேஷனில் முதல் நிறுவனமாக இணைந்திருக்கிறது.

யாகூ, கூகுள்

யாகூ, கூகுள்

மெயில், சாட்டிங் என சகல வசதிகளும் வழங்கும் யாகூ நிறுவனம் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதியும், கூகுள் நிறுவனம் 2009ஆம் ஆண்டும் அமெரிக்காவின் கண்காணிப்பு வளையத்தில் இணைந்துள்ளன.

ஃபேஸ்புக், யூ டியூப்

ஃபேஸ்புக், யூ டியூப்

இதேபோல் பலரும் பலமணிநேரம் குடியிருக்கக் கூடிய ஃபேஸ்புக் 2009ஆம் ஆண்டும் யூ டியூப் 2010ஆம் ஆண்டும் PRISM- ல் கை கோர்த்திருக்கிறது.

ஸ்கைப்

ஸ்கைப்

சாட்டிங், தொலைபேசி வசதி அளிக்கும் ஸ்கைப்பியும் 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் கண்காணிப்பு வலையில் தம்மை ஒப்படைத்துக் கொண்டுவிட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்பிள் நிறுவனமும் இந்த வலைக்குள் சிக்கியிருக்கிகிறது.

ஆண்டுக்கு 20மில்லியன் டாலர்

ஆண்டுக்கு 20மில்லியன் டாலர்

அமெரிக்காவின் PRISM ஆப்பரேஷனுக்கு ஆண்டுக்கு 20 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஒபாமாவுக்கு டெய்லி ரிப்போர்ட்

ஒபாமாவுக்கு டெய்லி ரிப்போர்ட்

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கொடுக்கப்ப்டும் தினசரி அறிக்கையில் கூட PRISM கண்காணிப்பு மூலம் பெறப்ப்ட்ட தகவல்களே இப்போதெல்லாம் கூடுதலக் இடம் பிடிக்கிறதாம்.

ஃபேஸ்புக், கூகுள் டாப்

ஃபேஸ்புக், கூகுள் டாப்

கடந்த ஆண்டு ஃபேஸ்புக் மூலம் பெறப்பட்ட தரவுகளானது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 131% கூடுதலாம்.. இதேபோல் கூகுள் மூலமான தரவுகள் 63% அதிகமாம்.

என்னவெல்லாம் கண்காணிக்கப்படுது?

என்னவெல்லாம் கண்காணிக்கப்படுது?

நீங்கள் பயன்படுத்தும் இ மெயில், வீடியோ சாட், ஆடியோ சாட், வீடியோக்கள், போட்டோக்கள், சேமித்து வைத்திருக்கும் தரவுகள், வீடியோ கான்பரன்ஸ் என சகலமும் அமெரிக்காவினால் கண்காணிக்கப்பட்டே நமக்கும் கிடைக்கிறதாம்..

நிறுவனங்கள் மறுப்பு

நிறுவனங்கள் மறுப்பு

இந்த செய்தி வெளியானதுதான் தாமதம், ஆப்பிள், கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் என அனைத்துமே மறுப்பு அறிக்கை வெளியிட்டதுடன் PRISM -அப்படின்னு ஒன்னை கேள்விபட்டதே கிடையாது என்றும் தங்களது இணையதள சேவை தரவுகளை வேறு எவர் ஒருவரும் அக்ஸெஸ் செய்ய அனுமதிக்கவில்லை என்றும் சொல்லி வைத்தாற்போல் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஆக... அமெரிக்காவிடம் அத்தனை பேரோட ஜாதகமும்!

English summary
Classified information obtained by the Washington Post and The Guardian has revealed a massive, warrantless online surveillance system in use by a US military intelligence agency, giving access to Americans' search history, emails, live chats and more. The 41-page PowerPoint presentation, which has been verified by both papers and published almost concurrently on Thursday evening, outlines details of a previously undisclosed program known as PRISM, which allows the fabled military intelligence agency to harvest massive amounts of data on everything from electronic correspondence to file transfers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X