6ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருவாரூர்-நாகையில் கருணாநிதி சுற்றுப்பயணம்

திமுக தலைவர் கருணாநிதி வரும் 5ம் தேதி இரவு 11.15 மணிக்கு சென்னையில் இருந்து காரைக்கால் செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸில் கிளம்புகிறார். மறுநாள் அதாவது 6ம் தேதி காலை திருவாரூரை சென்றடைகிறார். அங்கு அவருக்கு அம்மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவிருக்கிறது.
திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு சென்று அவர் ஓய்வெடுக்கிறார். அன்று மாலை 6 மணிக்கு நடக்கும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.
அன்று இரவு திருவாரூரில் தங்கும் அவர் 7ம் தேதி காட்டூரில் உள்ள அவரது அம்மா அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார். பின்பு திருவாரூரில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு திரும்பிச் செல்கிறார்.
வரும் 8ம் தேதி காலை காரில் நாகை புறப்படும் அவர் அங்கு திமுக சார்பில் சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கோரி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதன் பிறகு திருவாரூர் திரும்புகிறார்.
அன்று இரவு காரைக்காலில் இருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்புகிறார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications