For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அய்யய்யோ செப்டம்பரா? பறவைகள் கூட்டம் கூட்டமா தற்கொலை செய்யுமே! பதறும் சூழல் ஆர்வலர்கள்!

By Mathi
Google Oneindia Tamil News

குவஹாத்தி: மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான்.. குடும்பத்தோடவும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.. தற்கொலைக்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன.. அது மனிதனுக்கு தெரிகிறது..ஆனால் பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொள்ளும் என்றால் நம்புவீர்களா?

உலகில் இன்னும் தெளிவுபடுத்தப்படுத்தப்படாத பல மர்மங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில்தான் செப்டம்பர் முதல் நவம்பர் வரை இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடைபெறும் "பறவைகள் தற்கொலை"யும் புரியாத புதிராக இருக்கிறது. மிகச் சரியாக ஒவ்வொரு செப்டம்பர், நவம்பர் மாதத்தில் கூட்டம் கூட்டமாக பறவைகள் பறந்தபடியே இறந்து போய்விடுகின்ற மர்மத்துக்கு விடை கிடைக்கவில்லை..

எங்கே இருக்கிறது பறவைகள் தற்கொலை தேசம்?

எங்கே இருக்கிறது பறவைகள் தற்கொலை தேசம்?

அசாம் மாநிலத்தின் சசார் பிரதேசத்தில் இருக்கிற இடம் ஜதிங்கா..இதுதான் இந்தியாவிலேயே பறவைகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்கிற இடம்! அதுவும் குறிப்பிட்ட நேரமும் கூட இருக்கிறது!

எப்ப தற்கொலை செய்து கொள்ளும் பறவைகள்?

எப்ப தற்கொலை செய்து கொள்ளும் பறவைகள்?

ஜதிங்காவில் செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இரவு 7 மணி முதல் 10 மணி வரை பறக்கும் பறவைகள் அப்படியே தொப் தொப்பென தற்கொலை செய்து விடுவதால் அது "சுற்றுலா தலம்" என்றாகிவிட்டது

தற்கொலையை கண்காணிக்க வாட்ச் டவர் வேற

தற்கொலையை கண்காணிக்க வாட்ச் டவர் வேற

இப்படி பறவைகள் மர்மமாக செத்து போவதை கண்காணிக்க அங்கு வாட்ச் டவர் வேற வைத்திருக்கிறார்கள்..

மர்ம மரணத்துக்கு காரணம் என்ன?

மர்ம மரணத்துக்கு காரணம் என்ன?

பறவைகள் தற்கொலை செய்வதாக கூறப்பட்டாலும் இந்த மர்ம மரணங்களுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஜதிங்கா கிராம மக்கள் வேட்டையாடுகின்றனர், கடுங்குளிரை தாங்காத பறவை இனங்கள் மரித்து போகின்றன, கடும் பனிமூட்டத்தை தாங்க முடியாமல் செத்து போகின்றன என மர்ம முடிச்சுகளை அவிழ்க்க தொடர்ந்தும் பலர் முயற்சித்து வருகின்றனர்.

English summary
The tranquillity of Jatinga, a scenic village nestling among the Borail Hills range, is shattered every night by a disturbing occurrence - the 'mass suicide' of hundreds of birds. Locals have been witnessing the eerie phenomenon from September to November for the last couple of years. As the sun sets, hundreds of birds descend on the village and fly full speed towards buildings and trees, crashing to their deaths.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X