For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை பார்களில் பெண்கள் நடனம்: உச்ச நீதிமன்றம் அனுமதி!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Supreme Court clears way for running of dance bars in Maharashtra
டெல்லி: மும்பையில் மதுபான விடுதிகளில் பெண்கள் நடனமாட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மகராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பெண்கள் நடனமாடும் பார்கள் செயல்பட்டு வந்தன. குறிப்பாக மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும் மற்ற முக்கிய நடன அரங்களிலும் இது போன்ற நடனங்கள் நடந்தன.

இதற்கு எதிராக மும்பை போலீசார் கடந்த 2005-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த உயர் நிதிமன்றம் நடன பார்கள் நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து 7 ஆண்டுகள் மும்பையில் பெண்கள் பார்களில் நடனமாடவில்லை.

இந்த தடையை எதிர்த்து மதுபான விடுதி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பார்களில் பெண்கள் நடனமாட தடை விதித்த மாநில அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்ட்டிரா அரசு மேல்முறையீடு செய்தது. இதன் மீதான விசாரணை முடிவுற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், நீதிபர் எஸ்.எஸ்.நிஜார் அடங்கிய பெஞ்ச், பார்களில் பெண்கள் நடனமாட தடை விதித்த மாநில அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ததோடு, மாநில அரசின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பின் மூலம் மும்பையில் மட்டும் 70 ஆயிரம் நடன பெண்மணிகள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

English summary
Seven years after they were banned, dance bars can again run in Maharashtra with the Supreme Court today upholding a Bombay high court verdict quashing the state government's order.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X