For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெஞ்சை நிமிர்த்தாம அப்படியே நில்லுங்க... ஓ.கே., சரியாயிருக்கு நீங்க செலக்டட்!

Google Oneindia Tamil News

சென்னை: இனி போலீஸ் தேர்வின்போது மார்பளவை கணக்கிடும்போது தம் கட்டி நெஞ்சை நிமிர்த்தி நிற்க வேண்டியதில்லையாம். மாறாக டிஜிட்டல் முறையை அதற்காக அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்தப் புதிய டிஜிட்டல் கருவியைத்தான் இனிமேல் மார்பளவைக் கணக்கிடும்போது பயன்படுத்ப் போகின்றனராம்.

இந்தக் கருவியில் மார்பளவு துல்லியமாக தெரியும் என்பதால் கஷ்டப்பட்டு இனி கணக்கிடத் தேவை எழாது என்கிறார்கள்.

விறைப்பான மார்பு...

விறைப்பான மார்பு...

போலீஸ் தேர்வின்போது, அதில் கலந்து கொள்ளும் இளைஞர்களை மார்பை நிமிர்த்திய நிலையில் விறைப்பாக இருப்பதைப் பார்க்கலாம்.

விரிந்த நிலையில்... விரியாத நிலையில்

விரிந்த நிலையில்... விரியாத நிலையில்

மார்பளவை கணக்கிடுவதற்காக விரியாத நிலையிலும், விரிந்த நிலையிலும் விண்ணப்பதாரர்களை நிற்க வைத்து கணக்கிடுவார்கள்.

இனி அதுக்கெல்லாம் அவசியமில்லை

இனி அதுக்கெல்லாம் அவசியமில்லை

ஆனால் தற்போது அந்த கஷ்டங்களுக்கு முடிவு கட்டுகிறார்கள். புதிய டிஜிட்டல் கருவி வந்து விட்டதாம். உயரம், மார்பளவு போன்றவற்றை அளக்க புதிதாக இந்த டிஜிட்டல் கருவி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதனுடன் இணைந்த பெரிய திரையில் உடல் அளவுகள் துல்லியமாக தெரியும் என்பதால் முறைகேடுகளுக்கும் வாய்ப்பில்லையாம்.

170 செ.மீ உயரம்...

170 செ.மீ உயரம்...

போலீஸ் வேலைக்கு சேர வருவோருக்கு குறைந்தபட்ச படிப்புத் தகுதி 10வது மட்டுமே. உயரம் 170 செ.மீ குறைந்தபட்சம் இருக்க வேண்டும்.

மார்பளவு 81 செமீ.

மார்பளவு 81 செமீ.

அதேபோல மார்பளவானது சாதாரண நிலையில் 81 செ.மீ. இருக்க வேண்டும். விரிந்த நிலையில் கூடுதலாக 5 செ.மீ இருக்க வேண்டும்.

இனி எக்க வேண்டாம்

இனி எக்க வேண்டாம்

இந்த டிஜிட்டல் கருவி மூலம் தற்போது மார்பளவை துல்லியமாக கணிக்க முடியுமாம். அதேபோல உயரத்திற்காக சிலர் எக்கி நிற்பார்கள். அதுவும் இனி தேவையில்லை. இதனால் உயரம், மார்பளவு ஆகியவற்றில் இனி முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்பில்லையாம்.

விலைதான் ஜாஸ்தியா இருக்கு...

விலைதான் ஜாஸ்தியா இருக்கு...

ஒரு டிஜிட்டல் அளவீட்டுக் கருவியின் விலை ரூ. 1.46 லட்சமாம். விலை அதிகமாக இருந்தாலும் மொத்தமாக 33 கருவிகளை வாங்கவுள்ளனர்.

English summary
TN police is mulling to introduce digital measurement instruments to measure chest size during police selection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X