For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புகுஷிமா அணு உலையில் இருந்து புறப்பட்ட நீராவி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜாப்பானின் புகுஷிமா அணு உலையில் இருந்து நீராவி வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி பேரலை உருவானது. இதன் காரணமாக புகுஷிமா அணு உலை சேதமடைந்தது. கதிர் வீச்சு பரவியதால் அந்த உலை முடப்பட்டது.

Steam rising from Japan's Fukushima plant

சமீபத்தில் இந்த உலையில் இருந்து கதிர் வீச்சு நீர் வெளியேறுவதாக தகவல் வெளியானதால் பதற்றம் எழுந்தது.

இந்நிலையில் சேதமடைந்த புகுஷிமாவின் 3 வது உலையின் ஐந்தாவது தளத்திலிருந்து நீராவி வெளியேறுவதாக டோக்கியோ மின் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

மூன்றாவது உலையின் கொதி கலன்கள் மீது மழை நீர் விழுந்திருக்கலாம், அதனால் நீராவி வெளியேறி இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக மின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் உலையின் வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் உலையை குளிர்விக்க நீரைச் செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Steam or vapors appear to be coming from a damaged reactor building at Japan's tsunami-crippled nuclear plant, but the plant operator Tokyo Electric Power Co (TEPCO) has said radiation levels are steady.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X