For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேகமாக ரெடியாகிறது மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மதுரை மாட்டுத்தாவணியில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பஸ் நிலையப் பணிகள் வேகமாக நடப்பதாகவும், விரைவில் அது செயல்பாட்டுக்கு வரும் என்றும் மதுரை மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் ஏற்கனவே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது ஆம்னி பஸ் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்ட மேயர் ராஜன் செல்லப்பா, விரைவில் ஆம்னி பஸ் நிலையம் செயல்படத் தொடங்கும் என்றார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது..

உத்தங்குடி - திருமங்கலம் சுற்றுச்சாலை

மதுரை நகரில் போக்கு வரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சுற்றுச் சாலை உத்தங்குடி முதல் திருமங்கலம் வரை ஒரு பகுதியில் அமைக்கப்பட்டது.

சமயநல்லூர் வரை ரிங் ரோடு

தற்போது உத்தங்குடியில் இருந்து சமயநல்லூர் வரை ரிங் ரோடு அமைக்க மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையம்

மேலும் அரசிடம் நிதி உதவி பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாட்டுத் தாவணியில் ஆம்னி பஸ் நிலைய பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து அப்பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் ஆம்னி பஸ் நிலையம் செயல்படும் என்றார் அவர்.

அத்தனை பஸ்களும் இனி அங்கிருந்தே

மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையம் தொடங்கப்பட்டதும் நகரிலிருந்து இயக்கப்படும் அத்தனை ஆம்னி பஸ்களும் இந்த இடத்திற்கு மாறி விடும்.

English summary
Madurai mayor Rajan Chellappah said that Maatuthavani Omni bus stand will function soon after the completion of works.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X